பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடும் சர்தார்.. 3-வது நாளில் செம கலெக்ஷன்

கார்த்தியின் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ட்ரைலரில் கூட கண்டுபிடிக்காத அளவுக்கு இந்த படத்தில் கார்த்தி 16 கெட்டப்பில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

ஏற்கனவே ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 41 கோடி ரூபாய் சர்தார் திரைப்படம் வசூலித்தது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 21-ம் தேதி ரிலீசான இந்தப் படம் தொடர்ந்து மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

Also Read: வாட்டர் கேனை பார்த்தாலே பதருமாம்.. கார்த்தியின் சர்தார் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

முதல் நாளில் 4 முதல் 5 கோடி வரை மட்டுமே வசூலித்த சர்தார், 2-வது நாளில் 5 முதல் 6 கோடி வசூலை வாரி குவித்து தீபாவளி ரேஸில் முதலிடத்துக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி மூன்றாவது நாளில் 8 கோடி வசூல் செய்துள்ளதால், இதுவரை பாக்ஸ் ஆபிஸில் 20 கோடி ரூபாய் கலெக்ஷன் ஆகி உள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகையை திரையரங்கில் கொண்டாட ரசிகர்கள் நினைப்பதால் இந்த வாரத்திற்கான டிக்கெட் புக்கிங்கும் அதிகரித்து ஒரே வாரத்தில் 50 கோடி வரை சர்தார் வசூலை வாரிக் குவித்த போகிறது.

Also Read: ஷங்கரை மிஞ்சிய பிரம்மாண்டம்.. மொத்த கெட்டப்புகளையும் மறைத்து வெளியிட்ட சர்தார் படக்குழு

தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் அதிலும் முக்கியமாக அமெரிக்காவில் சர்தாருக்கு பாக்ஸ் ஆபீஸில் நல்ல ஓபனிங் கிடைத்து வருகிறது. ஆனால் இந்தப் படத்துடன் இணைந்து வெளிவந்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் பெரிய அளவில் வரவேற்ப பெறவில்லை.

மேலும் சத்தமில்லாமல் கார்த்தி பல வருடங்கள் நிறைய வெற்றிகளை கொடுத்து வருகிறார் அதே போல் இந்த வருடமும் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என 3 வெற்றிப்படங்களை கொடுத்து டாப் கியரில் செல்கிறார் என கார்த்தியை அனைத்து நடிகர்களும் பாராட்டுகின்றனர்.

Also Read: அதிரடி சரவெடி, கார்த்தியின் சர்தார் முழு விமர்சனம்.. பேன் இந்தியா தரத்தில் ஒரு தமிழ் படம்

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -