தி லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் புதுப்பட அப்டேட்… அவரோட கேரக்டர் என்னன்னு தெரியுமா?

தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் அவரது கடை விளம்பர படங்களில் மட்டும் தலை காட்டி வந்தார். விளம்பரத்திற்கே ஹன்சிகா, தமன்னா என முன்னணி நடிகைகளை அழைத்து வந்து அவர்களுடன் ஆட்டம் போட்டிருந்தார்.

இளம் நடிகைகள் மட்டுமின்றி வெளிநாட்டு அழகிகள் வரை தனது விளம்பர படங்களில் அழைத்து வந்து ஆடி வந்தார். இந்நிலையில் அவருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. ஆசையோடு விடாமல் தற்போது புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இப்படத்தை தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை எடுத்து வரும் இயக்குநர்கள் ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் இயக்கி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விக்ரமாதித்யா, விசில் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளனர்.

saravanan-annachi-movie-stills
saravanan-annachi-movie-stills

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா ஹீரோயினாக நடிக்கிறார். தவிர மறைந்த நடிகர் விவேக், ரோபோ ஷங்கர், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.

கொரோனா முதல் அலை சற்று குறைந்திருந்த சமயத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு குலு மணாலியில் நடைபெற்றது. படத்தின் ஷூட்டிங் ஸ்பார்ட் போட்டோக்களும், சரவணா ஸ்டோர் அருள் சண்டைக்காட்சியில் நடித்த போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் படத்தில் அருள் நடிக்கும் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சரவணன் அருள் இந்தப் படத்தில் விஞ்ஞானியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -