வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

யாரு வீட்டிலேயோ ஐடி ரெய்டு.. அதிர்ஷ்டம் என்னவோ லெஜண்ட் அண்ணாச்சிக்கு, டபுள் ஹேப்பி!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் தி லெஜண்ட் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்யப்பட்டு பிரம்மாண்டமாக வெளியான இந்த படத்திற்கு தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

படத்தைப் பார்த்து கேலியும், கிண்டலும் செய்து வந்த ரசிகர்கள் தற்போது இந்த படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். அந்த அளவுக்கு அண்ணாச்சி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்திருக்கிறார். படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் கணிசமான அளவு மட்டுமே இந்த படத்திற்கு கூட்டம் இருந்தது.

ஆனால் போகப் போக இந்த படத்திற்கான விமர்சனங்களை பார்த்து இப்போது குடும்ப ஆடியன்ஸ் பலரும் இந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு வருகிறார்களாம். அந்த வகையில் அண்ணாச்சி தற்போது இந்த படத்தின் மூலம் நல்ல லாபம் பார்த்து வருகிறார்.

மேலும் அவருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. இந்நிலையில் அண்ணாச்சிக்கு மற்றொரு அதிர்ஷ்டமும் அடித்துள்ளது. அதாவது மதுரை அன்பு செழியனின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஐடி ரெய்டு நடந்து வருகிறது.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு அண்ணாச்சி தான் பைனான்ஸ் செய்து வருகிறார். அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பிரபலமாக இருக்கிறார். ஆனால் இப்போது ஐடி ரெய்டு நடந்து வருவதால் அவரிடமிருந்து எந்த பக்கமும் பணம் போவதுமில்லை வருவதுமில்லை.

அந்த அளவுக்கு வருமான வரி துறையினர் அவரை எல்லா பக்கமும் கார்னர் செய்துள்ளனர். இதனால் அண்ணாச்சிக்கு என்ன லாபம் என்றால் இந்த வாரம் வெளியாக இருந்த 4 திரைப்படங்கள் இப்போது தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அன்பு செழியன் வருமான வரி பிரச்சனையிலிருந்து வெளிவந்தால் தான் சில திரைப்படங்கள் வெளியாகும் என்ற சூழ்நிலையும் இருக்கிறது.

இதனால் இந்த வாரமும் அண்ணாச்சி படத்திற்கு தியேட்டரில் எந்த போட்டியும் இல்லை. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி அவரின் தி லெஜண்ட் படம் நன்றாக கல்லா கட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அண்ணாச்சிக்கு சாதகமாகவே அமைந்துவிடுகிறது.

- Advertisement -

Trending News