ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

50 வயசுல இந்த நடிப்பு தேவையா.? பத்திரிகையாளருக்கு ஷாக்கான பதிலடி கொடுத்த அண்ணாச்சி

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஹீரோவாக நடித்திருக்கும்  திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தை பிரமோஷன் செய்யும் பணிகளில் அண்ணாச்சி பயங்கர பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாச்சியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அவை அனைத்திற்கும் அவர் மிகவும் கூலாகவும், சுவாரஸ்யமாகவும் பதில் அளித்தது அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

அதில் ஒரு பத்திரிக்கையாளர் அண்ணாச்சியிடம் 50 வயதிற்கு மேல் நீங்கள் ஹீரோவாக நடிக்கிறீர்கள், இந்த வயசுல நடிப்பு தேவையா என்று கேட்டார். இதற்கு அவர் எந்த கோபமும் படாமல் பதில் அளித்தார். அதாவது ஹிந்தியில் அமிதாப்பச்சன் தற்போது வரை நடித்துக் கொண்டு இருக்கிறார்.

அதேபோன்று தமிழிலும் கமல், ரஜினி போன்ற மூத்த நடிகர்கள் இந்த வயதிலும் ஹீரோவாக நடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அப்படி இருக்கும் போது என்னிடம் ஏன் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். அந்த நடிகர்களிடம் இதை கேட்க வேண்டியதுதானே என்று ரொம்பவும் சாமர்த்தியமாகவும், கூலாகவும் பதில் கூறினார்.

அவருடைய இந்த பதிலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அண்ணாச்சியை பொருத்தவரை படம் வெற்றி அடைவதும், தோல்வி அடைவதும் இரண்டாம் பட்சம் தான். இதை வைத்து பல சினிமா குடும்பங்கள் வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய எண்ணம்.

அந்த நம்பிக்கை தான் அவரை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளது. அதேபோன்று இந்த படத்தின் மூலம் அவருக்கு அரசியலில் நுழைய வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறதாம். அதற்கான முன்னோட்டமாகவும் அவருடைய சினிமா எண்ட்ரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் பிரபலமாகிவிட்டால் அடுத்தது நேரடியாக அரசியலில் குதித்து விடலாம் என்பதுதான் மறைமுகமான உண்மை.

- Advertisement -

Trending News