வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சினிமாவில் இப்படி காசை போட்டு கரியாக்குறீங்களே.? டாப் ஹீரோக்களுக்கு சவால்விடும் அண்ணாச்சியின் பதில்

தொழில் துறையில் மிகப்பெரிய சாதனை படைத்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது தி லெஜன்ட் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாயுள்ளார். இப்படம் ஐந்து மொழிகளில் வருகின்ற 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. தி லெஜன்ட் படம் உலகம் முழுவதும் 2500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.

தற்போது படத்தின் புரமோஷனுக்காகவே பல கோடிகள் செலவு செய்துள்ளார் அண்ணாச்சி. மேலும் தி லெஜன்ட் படத்தின் ஆடியோ லான்ச் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் நடிகைகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்ச்சி விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில் ஆடியோ லான்ச் விழாவில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது நடிகை ஹன்சிகா நீங்கள் படங்களில் எந்த நடிகருடன் ஆவது இணைந்து நடிப்பீர்களா என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அண்ணாச்சி நான் சோலோ ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என சிரித்தபடி பதிலளித்திருந்தார்.

இதை பார்த்த ரசிகர்கள் தற்போது டாப் ஹீரோக்களாக உள்ள நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு அண்ணாச்சியின் பேச்சு இருப்பதாக கூறியுள்ளனர். இந்நிலையில் மேலும் பேசிய அண்ணாச்சி சினிமா என்பது தன்னுடைய தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும் இதன்மூலம் மக்கள் பயனடைவார்கள்.

என்னுடைய ஒரு படம் உருவாகிறது என்றாலே அதில் ஏகப்பட்ட தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். அதனால் தான் படங்களில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக அண்ணாச்சி கூறியுள்ளார். அதாவது தனக்கு சினிமாவில் ஆசை இருந்தாலும், அது சிலருக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என அண்ணாச்சி நினைத்துள்ளார்.

மேலும் தி லெஜன்ட் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி யூட்யூபில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். பெரிய ஹீரோக்களின் படங்களை தாண்டி அண்ணாச்சியின் படம் அதிக திரையரங்குகளில் வெளியாவதால், போற போக்கை பார்த்தால் டாப் ஹீரோக்களுக்கு டஃப் கொடுப்பார் போல அண்ணாச்சி.

ஆனால் மற்ற ஹீரோக்கள் சினிமாவில் சம்பாதிக்க வேண்டும் என படங்களில் நடித்து வரும் நிலையில் நம்ம அண்ணாச்சி சம்பாதித்த மொத்த காசையும் சினிமாவில் இப்படி கரியாக்கி வருகிறார்.

- Advertisement -

Trending News