என்ன பொறுத்த வரைக்கும் படம் ஹிட்.. அடுத்த ரெண்டு கதைக்கு ஓகே சொன்ன அண்ணாச்சி

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரான அண்ணாச்சி சரவணன் அருள், இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கிய தி லெஜண்ட் திரைப்படத்தில் நடித்து, தனது முதல் படத்திலேயே கமர்ஷியல் ரீதியான வெற்றியை பெற்றுள்ள நிலையில், இவர் அடுத்து நடிக்க உள்ள திரைப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி உள்ளது.

40 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட தி லெஜண்ட் திரைப்படம் 10 கோடி வசூலை பெற்றதால், அதுவே என்னை பொறுத்தவரைக்கும் படம் ஹிட் என்று அண்ணாச்சி சரவணன் அருள், அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டார்.

இதனிடையே தி  லெஜண்ட் திரைப்படத்தில் கிடைத்த விமர்சனங்களை மனதில் வைத்துக் கொண்டு தனது அடுத்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த உள்ளதாக லெஜெண்ட் சரவணன் தெரிவித்துள்ளார்.

இதுவரை இரண்டு படங்களின் கதைகளை கேட்டு ஓகே சொல்லியிருக்கும் சரவணன் அண்ணாச்சி, அந்தப் படங்களில் புது புது யுக்திகளை பயன்படுத்த இருக்கிறார். கதைக்கு தகுந்த கதாபாத்திரங்களிலும், கேங்ஸ்டர் படங்களிலும் நடிக்கும் எண்ணத்தில் இருக்கும் சரவணன் அண்ணாச்சி இனிமேல் புது புது கெட்டப்பில் நடிக்க பார்க்கிறார்.

50 வயதைத் தாண்டிய நிலையில் சினிமாவில் இவ்வளவு ஆசையுடன் இளம் நடிகர்களைப் போல் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற அண்ணாச்சி சரவணன் அருளின் ஆர்வம் மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இவரின் அடுத்த திரைப்படத்தையும் இவரே தயாரிக்கப் போவதாகவும், புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் சரவணன் அண்ணாச்சி,  அந்தப் படங்களை குறித்த முழுவிபரங்களையும் கூடிய சீக்கிரம் வெளிவிட போகிறார்.