10 நிமிஷம் வந்துட்டு போனதுக்கு சரத்குமார் வாங்கிய சம்பளம்.. அதிர்ச்சியை கிளப்பிய பிக்பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பல எதிர்பார்ப்புகளை கிளப்பி வருகிறது. அதில் பங்கு பெறும் போட்டியாளர்களை விட ரசிகர்களுக்கு தான் அந்த டைட்டிலை யார் வெல்வார்கள் என்பதை அறியும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என்ட்ரி கொடுத்தார். அவரை பிக்பாஸ் வீட்டில் எதிர்பார்க்காத போட்டியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள்.

அவர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடிய சரத்குமார் இந்த நிகழ்ச்சியை நான் அவ்வப்போது பார்ப்பேன் என்று கூறினார். மேலும் போட்டியாளர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்தும் வகையில் சில விஷயங்கள் பேசிய அவர் உடற்பயிற்சி சம்பந்தமான சில குறிப்புகளை கொடுத்தார்.

பின்னர் சரத்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் பரம்பரா திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் பிக்பாஸ் வழக்கமாக கொடுக்கும் ஆஃபர் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது.

அதாவது ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி அதை போட்டியாளர்கள் யாராவது எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என்று அறிவிப்பார். எப்பொழுதும் பணப்பெட்டியை மட்டும் அனுப்பும் பிக் பாஸ் இன்று அந்த ஆஃபரை வழங்குவதற்கு நடிகர் சரத்குமாரை அனுப்பியுள்ளார்.

சுமார் 3 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் என்ற அறிவிப்பு போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பை சரத்குமார் போட்டியாளர்களிடம் கூறி நன்றாக யோசித்து முடிவெடுங்கள் என்று சொல்லி விடைபெற்றார்

இந்த பண பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சரத்குமாருக்கு 10 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. பெட்டியில் இருந்த பணமே 3 லட்சம் ரூபாய் தான், ஆனால் அதை எடுத்துக் கொண்டு வந்தவருக்கு 10 லட்சமா என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு பல கோடி சம்பளம் வழங்கும் பொழுது, ஒரு மணி நேரம் வந்து சென்ற சரத்குமாருக்கு பத்து லட்சம் ரூபாய் கொடுத்தது சரிதான் என்று பலரும் குறிப்பிடுகின்றனர். இதுதவிர நடிகர் சரத்குமார் கடந்த வருட தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி கூட்டணியில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அந்த நட்பின் காரணமாகவும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ளார்.