இயக்குனர், ஹீரோ, காமெடியன் மூன்று பேருக்கும் ஒரே சம்பளம்.. கம்மி பட்ஜெட்டில் அதிக லாபம் கொடுத்த சரத்குமாரின் படம்

80, 90களில் முன்னணி நடிகராக வலம் வந்து பல குடும்ப படங்களில் நடித்து வெற்றி பெற்றவர்களில் ஒருவர் தான் நடிகர் சரத்குமார். இவர் இரண்டு, மூன்று கேரக்டரில் நடித்து அதிகமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அப்படி இவர் நடிப்பில் எத்தனையோ படங்கள் வெளி வந்திருந்தாலும் சில படங்களை நம்மளால் மறக்கவே முடியாது. அதில் சூரிய வம்சம், மூவேந்தர், நட்புக்காக, நாட்டாமை போன்ற படங்கள் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது.

முக்கியமாக கிராமத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் விதமாக நாட்டாமையாக நடித்திருப்பார். இப்படம் 1994 ஆம் ஆண்டு சரத்குமார், விஜயகுமார், மீனா, குஷ்பூ மற்றும் கவுண்டமணி ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இப்படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கி இருக்கிறார். இப்படத்தை இயக்குவதற்கு மொத்த பட்ஜெட் 55 லட்சம் மட்டுமே ஆனது.

Also read: 5 ரூபாய்க்கு கூட வழியில்லாமல் நடுரோட்டில் நின்ற சரத்குமார்.. காரணம் கேட்டா அதிர்ச்சி ஆயிடுவீங்க!

அதில் நடிகர் சரத்குமார், கவுண்டமணி, இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இவர்கள் மூன்று பேருமே ஒரே மாதிரி சம்பளமாக 5 லட்சம் மட்டுமே வாங்கி இருக்கிறார்கள். இது மாதிரி எந்த படத்தில் அமைந்ததே இல்லை . ஏனென்றால் மிகக் குறைந்த பட்ஜெட்டில் இப்படத்தை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதால் இயக்குனர் ஒவ்வொன்றையும் மிக கவனமாக பார்த்து பார்த்து செய்தார்.

அதற்காகவே அவர்களுடைய சம்பளத்தையும் குறைத்தே வாங்கிக் கொண்டார்கள். இப்படி இவர்கள் மூவருக்கும் சம்பளத்தை கொடுத்தது போக மீதி இருக்கும் 40 லட்சத்தில் படத்தையும் எடுத்து மற்ற நடிகர்களுக்கு சம்பளத்தையும் கொடுத்துள்ளார்கள். அப்படியே இயக்குனர் ஒவ்வொன்றையும் கம்மியாக செலவு செய்து படத்தை எடுத்து முடித்தார்.

Also read: குஷ்பூவுக்காக மாற்றப்பட்ட கதை, வம்படியாக உள்ளே வந்த மீனா.. நாட்டாமை படத்தின் சுவாரஸ்யத்தை பகிர்ந்த இயக்குனர்

அதன் பின் இப்படம் வெளிவந்து யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்று மக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியது. அதிலும் பாக்ஸ் ஆபிஸில் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்றது. அத்துடன் வணிக ரீதியாகவும் பெரிய லாபத்தை இப்படம் பார்த்தது. தமிழ்நாடு முழுவதும் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்ட படமானது.

இந்த அளவுக்கு வெற்றி பெற்று அதிக லாபத்தை பார்த்த பிறகும் தயாரிப்பாளர் எந்தவித மூச்சும் காட்டாமல் இயக்குனருக்கும் மற்ற நடிகர்களுக்கும் யாருக்குமே சம்பளத்தை கூட்டாமல் மொத்த லாபத்தையும் தயாரிப்பாளரை எடுத்துக் கொண்டார்.

Also read: 90-களில் கேஎஸ் ரவிக்குமார், சரத்குமாருக்கும் ஏற்பட்ட கடும் சண்டை.. டூப்  போட்டே படத்தை முடித்த கொடுமை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்