முதல் முறையாக சரத்குமாருக்கு ஜோடியாகும் உலக அழகி.. வயசானாலும் மனுஷன் கெத்து காட்டுறாரு!

சமீபத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்ட சரத்குமார் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டுள்ளாராம். அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் பழுவேட்டரையர் என்ற கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துக் கொண்டிருக்கிறாராம். முதலில் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்தார் சரத்குமார்.

பின்னர் மார்க்கெட் குறைந்த பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகர்களுக்கு அப்பா வேடத்தில் நடித்து வருகிறார். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கியுள்ள சரத்குமாருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது பாகுபலியில் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் போல் பேசப்படும் என எதிர்பார்க்கிறாராம். இந்நிலையில் சரத்குமாருக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யாராய் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

aiswarya-rai-cinemapettai
aiswarya-rai-cinemapettai

இவர்களோடு பிரபல நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி போன்றோரும் ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் தினமும் அனைத்து நடிகர்களுக்கும் கொரானா பரிசோதனை செய்து பாதுகாப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம். ஐஸ்வர்யாராயுடன் அவரது மாமனார் அமிதாப் பச்சனும் இந்த படத்தில் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் கூடுதல் தகவல்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்