வரிசையாக 15 படங்கள், பணத்தை திரும்ப கேட்ட தயாரிப்பாளர்கள்.. சரத்குமார் வாழ்க்கையை புரட்டிப் போட்ட சம்பவம்

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் பல படங்களில் வில்லனாக நடித்து பின்பு ஹீரோவாக தடம் பதித்தவர் சரத்குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது.

தமிழ் சினிமாவில் வில்லனாக நடிக்கும் நடிகர்களை பெரிதும் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் சரத்குமாரை தமிழக ரசிகர்கள் வில்லனாகவும், ஹீரோவாகவும் ஏற்றுக்கொண்டனர்.

Sarathkumar_IT Raid

அதனாலயே ஒருகாலத்தில் வில்லனாக ஒரு சில படங்களிலும் ஹீரோவாக, ஒரு சில படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்று தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த சரத்குமாருக்கு திடீரென குரல் பிரச்சனையால் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அப்போது வில்லனாக பல படங்களில் கிட்டத்தட்ட 15 படங்கள் கமிட்டாகி உள்ளார் சரத்குமார். இதனால் படங்களில் நடிக்க முடியாது என்பதை அறிந்த பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வீட்டிலேயே வந்து கொடுத்த அட்வான்ஸ் திரும்பப் பெற்றுள்ளனர்.

சினிமாவிலிருந்து சரத்குமாரை தூக்கி எறியும் சூழ்நிலை ஏற்பட்டது. எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், கேஎஸ் ரவிக்குமார் சரத்குமாரை சந்தித்துள்ளார். நீங்களும் அட்வான்ஸ் திரும்ப வாங்குவதற்கு வந்து இருக்கிறீர்களா என்று கேட்டு உள்ளார்.

அதற்கு கேஎஸ் ரவிக்குமார் இல்லை என் முதல் படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கூரியது மட்டுமில்லாமல் அதேபோல் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கினாராம்.

குரல் சரியாக வருவதற்கு கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகும் என கூறியும் கேஎஸ் ரவிக்குமார் பரவாயில்லை எத்தனை மாதங்கள் ஆகினாலும் நான் உங்களை வைத்து தான் புரியாத புதிர் படத்தை எடுப்பேன் என உறுதியாக கூறியுள்ளார். இந்த சம்பவத்தை பேட்டி ஒன்றில் கூறும் போது கண்கலங்கி விட்டார் சரத்குமார்.

ks-ravikumar-sarath
ks-ravikumar-sarath
- Advertisement -