வாழ்நாளில் சரத்குமார் இயக்கிய ஒரே ஒரு படம்.. படுதோல்வியால் இயக்கத்துக்கு கோடி கும்பிடு போட்ட சம்பவம்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பல்வேறு முகங்களைக் கொண்டவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். அரசியலிலும் இவருக்கு அறிமுகம் கொடுக்க தேவையில்லை.

சரத்குமார் ஆரம்பத்தில் வில்லன் நடிகராக தான் தன்னுடைய கேரியரை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் படங்கள் அவருக்கு ஹீரோ இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் சரத்குமார் கூட்டணியில் உருவாகும் படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து வந்தன.

இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 12 படங்களில் பணியாற்றினார். ஆனால் சமீபகாலமாக சரத்குமார் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திவிட்டு முன்னணி நடிகர்களுக்கு தந்தை வேடத்திலும் வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார்.

அப்படிப்பட்ட சரத்குமார் தன்னுடைய வாழ்நாளில் ஒரே ஒரு படம்தான் இயக்கியுள்ளார். சரத்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான தலைமகன் என்ற படத்தை இயக்கினார் சரத்குமார். அதுவும் அவரது 100வது படம்.

thalaimagan-cinemapettai
thalaimagan-cinemapettai

தலைமகன் படம் வெளியாகி முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டவில்லை. அந்த அளவுக்கு மோசமாக தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு இனி தன் வாழ்நாளில் படம் இயக்க மாட்டேன் என சபதம் எடுத்து விட்டாராம் சரத்குமார்.

தலைமகன் படத்தின் தோல்வியை பற்றி கேட்டபோது, இயக்குனராவதில் கொஞ்சம் ஆர்வம் இருந்ததால் அந்த படத்தை எடுத்ததாகவும், அந்த படம் ரிலீசான பிறகு இருந்த கொஞ்ச நஞ்ச ஆசையும் போய்விட்டது என ஓபன் ஆக தெரிவித்தாராம் சரத்குமார்.

- Advertisement -