ஆங்கிரி பேர்ட் ஆக மாறி கொலை மிரட்டல் விடுத்த சரண்யா பொன்வண்ணன்.. நடு ரோட்டில் நடந்த தகராறு

Actress Saranya Ponvannan: டாப் ஹீரோக்களுக்கு அம்மா கேரக்டர் என்றாலே நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன் தான். காமெடி, சென்டிமென்ட் என அனைத்திலும் இவர் கை சேர்ந்தவர்.

ஆனால் நெகட்டிவ் ரோல் மட்டும் இவருக்கு செட் ஆகாது. அந்த அளவுக்கு அமைதியின் சொரூபமாக இவர் இருப்பார்.

அப்படிப்பட்டவர் இப்போது ஆங்கிரி பேர்டாக மாறி இருக்கிறார். கார் பார்க்கிங் தொடர்பான பிரச்சனையில் தற்போது இவர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கொலை மிரட்டல் விடுத்தல் சரண்யா

விருகம்பாக்கத்தில் வசித்து வரும் இவருக்கும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி பக்கத்து வீட்டு பெண் ஸ்ரீதேவி தனது வீட்டின் கேட்டை திறக்கும் போது சரண்யா கார் மீது உரசுவது போல் சென்றிருக்கிறது.

இதுதான் பிரச்சனைக்கு மூல காரணமாக அமைந்துள்ளது. இதனால் கடுப்பான சரண்யா அவரிடம் வாக்குவாதம் செய்து இருக்கிறார்.

அதை தொடர்ந்து அவருடைய குடும்பமே ஸ்ரீதேவி வீட்டிற்குள் சென்று தகராறில் ஈடுபட்டிருக்கின்றனர். அதில் சரண்யா அப்பெண்ணை கொன்று விடுவேன் என மிரட்டி இருக்கிறார்.

இதனால் பயந்து போன ஸ்ரீதேவி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். மேலும் அது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களையும் கொடுத்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமாவில் சாந்தமாக இருக்கும் சரண்யாவுக்கு இப்படி ஒரு முகமும் இருக்கிறதா என அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

 

Sharing Is Caring:

Leave a Comment

சமீபத்திய சினிமா செய்திகள்