Entertainment | பொழுதுபோக்கு
சரண்யா அம்மாவாக நடித்து வசூல் சாதனை படைத்த 5 படங்கள்.. இவங்க நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்!
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் பல நடிகைகள் நடித்துள்ளனர். அந்த வரிசையில் சரண்யா பொன்வண்ணன் இடம் பிடித்துள்ளார். சரண்யா அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மாபெரும் ஹிட்டடித்த படங்களை பற்றி பார்ப்போம்.

saranya-cinemapettai
ராம்: ஜீவா நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது திரைப்படம் ராம். இப்படத்தை சரண்யாவை வைத்துதான் கதையை அமைத்திருப்பார் அமீர். ஒரு புத்தி சுவாதீனமில்லாத ஒரு மகனை தாய் எப்படி வளர்கிறாள், அவன் தாயின் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறான் என்பதே படத்தின் கதை.
சரண்யாவின் அம்மா கதாபாத்திரம் இப்படம் வெற்றி அடைவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. சரண்யா இப்படத்தில் சரண்யா இல்லை என்றால் படம் வெற்றி அடைந்து இருக்காது என்று கூட கூறலாம் ஏனென்றால் இவரை வைத்துதான் கதையின் மையக்கருவாக அமைத்திருந்தார் அமீர். சரண்யாவுக்கு மற்றும் அவரது ரசிகர்களுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது ராம் திரைப்படம் தான்.
ஒரு கல் ஒரு கண்ணாடி: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது திரைப்படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அம்மாவாக செண்பகம் எனும் கதாபாத்திரத்தில் சரண்யா நடித்திருப்பார்.
இப்படத்தில் இவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்று தான் கூற வேண்டும். 40 வயதுக்கு மேலாகியும் காலேஜுக்கு போய் படிப்பது மற்றும் உதயநிதி ஸ்டாலின் காதலுக்கு எதார்த்தமான அம்மாவாக உதவி பண்ணுவது என விளையாட்டுத்தனமான அம்மாவாக நடித்து இருப்பார் இவரது திரை வாழ்க்கையில் இந்த படமும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் பார்க்க
எம் மகன்: சரண்யாவின் திரைவாழ்க்கையில் ரசிகர்கள் மறக்க முடியாத திரைப்படம் என்றால் அது எம் மகன் திரைப்படம் தான். இப்படத்தில் பரத்திற்கு அம்மாவாக சரண்யா நடித்திருப்பார். இப்படத்தில் கணவர் நாசர்காக பயந்து நடிக்கும் காட்சிகள் அனைத்தும் சரண்யா மற்றும் பரத் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள்.

em-magan-cinemapettai
அதுமட்டுமில்லாமல் சரண்யா நடித்திருக்கும் காட்சிகள் அனைத்துமே இன்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று தான் இருக்கிறது. இப்படம் வெற்றி அடைவதற்கு சரண்யாவின் நடிப்பும் ஒரு காரணம் என்று கூறலாம். அதுமட்டுமில்லாமல் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது கிடைத்தது.
களவாணி: விமலின் வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றால் அது களவாணி திரைப்படம் தான். இப்படம் வெற்றி அடைவதற்கு சரண்யாவின் நடிப்பும் ஒரு காரணம். இப்படத்தில் தன் மகனுக்காக சப்போர்ட் பண்ணி பேசும் சரண்யா காட்சிகள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் ஆடி போயி ஆவணி வந்தா என் மகன் டாப்பா வருவான் என கூறும் வசனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.அதுமட்டுமில்லாமல் இவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது கிடைத்தது.
வேலையில்லா பட்டதாரி: தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இப்படம் முழுக்க முழுக்க இன்ஜினியர் பட்டதாரி படித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கும் நபர்களின் கதை என்று கூட கூறலாம்.

saranya
கட்டிடக்கலை படிப்பு படித்துவிட்டு எப்படியாவது ஒரு கட்டிடத்தை உருவாக்க நினைக்கும் தனது மகனுக்கு ஆதரவாகயிருக்கும் தாயாக சரண்யா நடித்திருப்பார். இப்படத்தில் தனுஷ் பேசும் என்னை எல்லாம் யாரு மா லவ் பண்ண போறாங்க என சொல்லும்போது அதற்கு சரண்யா உனக்கு என்னடா குறைச்சல் என தனுசுக்கு சப்போர்ட்டாக பேசுவார். இந்த மாதிரி படம் முழுவதும் தனுசுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு தாயாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றார்.
வேலையில்லா பட்டதாரி படத்தைப் பார்க்க
மேற்கண்ட படங்களில் நடித்த சரண்யா அனைத்து படங்களிலுமே தன் மகனுக்காக எதையும் செய்யும் தாயாகயிருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மகன்களிடம் பாராட்டைப் பெற்றார். இவருடைய கதாபாத்திரம் பார்க்கும்பொழுது அனைத்து வீட்டிலும் இருக்கும் ஒரு அம்மா கதாபாத்திரம் என்றே கூறலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள 5 படங்களும் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
