சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சூர்யா மீது கொலவெறியில் இருக்கும் சந்தானம்.. மனுஷன் இன்னும் பழச மறக்கல

சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் இப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை என 5 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது.

இதனால் திரைத் துறையைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சூர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சந்தானத்தின் குலுகுலு படத்தின் ஃபங்ஷன் சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. இதில் உதயநிதி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது சந்தானத்திடம் பத்திரிக்கையாளர்கள் சூர்யா தேசிய விருது வாங்கியதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருந்தனர். சூர்யா, சந்தானம் காம்போவில் பல படங்கள் வெளியாகியுள்ளது. அதில் சில்லுனு ஒரு காதல், சிங்கம் போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் ரிலீசான போது சந்தானத்தின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது சபாபதி படத்தின் படவிழாவில் ஒரு சமூகத்தை தாழ்த்திப் பேசி படம் எடுக்காதீர்கள் ஜெய்பீம் படத்தை மறைமுகமாக சந்தானம் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் சந்தானம் மற்றும் சூர்யா இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்ததை பற்றிய கேள்விக்கு சந்தானம், இதைப் பற்றி சொல்ல எல்லாம் எனக்கு நேரம் கிடையாது என கூறியுள்ளார்.

மேலும் குலுகுலு படத்தைப்பற்றி கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என வசைபாடியுள்ளார். இதனால் சந்தானம் இன்னும் பழசை மறக்காமல் சூர்யா மீது கடுப்பில் தான் உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் தமிழ் சினிமாவே சூர்யாவை கொண்டாடி வரும் நிலையில் சந்தானம் இவ்வாறு கூறியிருப்பதை சூர்யா ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News