அனைய போகும் நேரத்தில் பிரகாசமாக ஜொலிக்கும் சந்தானம்.. ஹீரோவுக்கு குட் பாய் சொன்ன நேரத்தில் தாறுமாறாக மாறும் அதிர்ஷ்டம்

Actor Sandhanam: சந்தானம் ஒன் மேன் ஆர்மியாக காமெடியில் கலக்கி வந்தார். திடீரென்று ஹீரோவாக மாற வேண்டும் என்ற ஆசையில் இனி காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று முடிவெடுத்திருந்தார். அதன் விளைவாக இவருடைய முழு கவனத்தையும் நடிகராக நடிப்பதில் மட்டுமே இருந்தது. அப்பொழுது இருந்தே இவருக்கு நேரம் சரியில்லை என்றே சொல்லலாம்.

அதற்கு காரணம் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்கவில்லை. இதனால் மறுபடியும் காமெடியனாகவே போய்விடலாம் என்று முடிவு பண்ணி விட்டார். இந்த சமயத்தில் டிடி ரிட்டன்ஸ் படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

Also read: எனக்கும் நயன்தாராவுக்கும் எப்படிப்பட்ட உறவு தெரியுமா.? ஓபன் ஆக போட்டு உடைத்த சந்தானம்

எப்பொழுதும் போல இப்படத்திற்கும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காது என்று நினைத்திருந்தார். ஆனால் இவர் நினைப்புக்கு எதிராக வெளிவந்த டிடி ரிட்டன்ஸ் படம் நான்கு நாட்களிலே சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல்லாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

முக்கியமாக மாயாஜாலில் இருக்கும் 11 ஸ்கிரீன்லையும் இவரது படம் தான். ஞாயிற்றுக்கிழமை முதற்கொண்டு அனைத்தும் ஃபுல்லா ஆகியிருக்கிறது. அந்த வகையில் மொத்தம் 50 காட்சிகள், 8000 க்கும் மேற்பட்ட டிக்கெடுகள் விற்கப்பட்டு எதிர்பார்த்த அளவைவிட அசுர வேகத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

Also read: தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்ட சந்தானம்.. பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பொழப்பு சிரிப்பா சிரிக்குது

இந்த நான்கு நாட்களில் மட்டுமே 13 கோடியை தாண்டி வசூல் வேட்டையாடி வருகிறது. அதாவது பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதற்கு ஏற்ப இவருடைய விடாமுயற்சி இவரை கைவிடவில்லை என்றே சொல்லலாம். ஆனால் இதற்கு முன்னதாக இவருக்கு ஏற்பட்ட தோல்வியினால் இனிமேல் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்று இவருடைய ஆசைக்கு குட் பாய் சொல்லி இருந்தார்.

திடீரென இப்படம் நன்றாக வெற்றி பெறுவதால் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அனைய போற விளக்கு பிரகாசமாக ஜொலிக்கும் என்பதற்கு ஏற்ப ஹீரோ வேண்டாம் என்ற முடிவெடுத்த நிலையில் கடைசி படத்தின் மூலம் ஜொலித்துக் கொண்டிருக்கிறாரா என்பது தெரியவில்லை.  எது எப்படியோ இத்தனை வருஷமாக கஷ்டப்பட்டது வீண் போகவில்லை.

Also read: அப்படி இருந்த சந்தானம் இப்படி ஆயிட்டார்.. ஒரே நாளில் 4 பட சூட்டிங், அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்