குறைந்த பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்க்கும் சந்தானம்.. 80ஸ் கெட்டப்பில் 18 நாளில் செய்த சம்பவம்

Actor Santhanam: சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக இருந்த சந்தானம், பின்பு படங்களில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவை கலக்கினார். அதன் பின்பு இப்போது காமெடி படங்களில் ஹீரோவாக நடித்த வருகிறார். இவர் மறுபடியும் டாப் நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

‘நல்ல கதையும் எனக்கான ஸ்பேசும் அமைந்தால் நிச்சயம் மீண்டும் டாப் நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடிக்க தயார்’ என்றும் சந்தானம் வெளிப்படையாக சொன்னார்.  இந்த நிலையில் முழுக்க முழுக்க காமெடி படமாக இருக்கும் 80ஸ் பிஸ்டல் என்ற படத்தில் சந்தானம் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தை வெறும் 18 நாட்களில் எடுத்து முடித்து சாதனை புரிந்துள்ளனர். இதற்கு முன்பு சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் வெற்றி பெற்றது. அந்த வரிசையில் 80ஸ் பிஸ்டல் படமும் இணைய போகிறது.

இந்தப் படத்தை குலேபகாவலி மற்றும் மகளிர் மட்டும் படத்தின் இயக்குனர் கல்யாண் இயக்கி உள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக போகிறது. அது மட்டுமல்ல இந்தப் படத்தை வெறும் பதினெட்டே நாளில் 10 கோடி பட்ஜெட்டில் எடுத்து திரையுலகையே வியக்க வைத்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் மூலம் குறைந்தது 50 கோடியாவது லாபம் பார்க்க வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார். அதுமட்டுமல்ல சந்தானம் இந்த படத்தில் 80’s கெட்டப்பில் பார்க்கும்போதே சிரிப்பூட்டும் வகையில் இருக்கிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக பூவே உனக்காக சீரியல் நடிகை ராதிகா ப்ரீத்தி நடிக்கிறார்.

இந்தப் படத்தில் இவர்களுடன் மன்சூர் அலிகான், கிங்ஸ்லி, கேஸ் ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்டோரரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்க உள்ளனர்.