அடிமேல அடி வாங்கியும் திருந்தாத சந்தானம்.. விடாத பேராசையால் வரும் பேராபத்து

ஒரு காலகட்டத்தில் சந்தானம் காமெடியில் பெரிய அளவில் கலக்கி வந்தார். பின்பு இவருக்கு பின்னாடி உள்ளவர்கள் எல்லாம் விஜய் டிவியில் இருந்து வந்து இப்பொழுது பெரிய அளவில் நடிகராக மாறிவிட்டனர். அதனால் இவரும் தன்னை இனிமேல் காமெடியனாக மக்கள் முன்னாடி காமிக்க கூடாது என முடிவு பண்ணி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இவர் ஆரம்பகாலத்தில் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் ஓரளவு மட்டுமே வெற்றியை பெற்றது. ஆனால் தற்போது இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. சமீபத்தில் ரத்னகுமார் இயக்கத்தில் குளுகுளு எனும் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் அவருக்கு பலத்த அடியே பெற்றுத் தந்தது.

Also read: ஹீரோ அவதாரத்தை கைவிட்ட 4 காமெடி நடிகர்கள்.. மீண்டும் பழைய ரூட்டிற்கே திரும்பிய பரிதாபம்

இதனால் அப்செட்டில் இருந்த சந்தானத்திற்கு அஜித் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் காமெடியனாக நடிக்க முடிவு செய்துவிட்டார். ஏனென்றால் இவர் போயஸ் கார்டனில் ஒரு வீடு வாங்குவதற்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டதால் அஜித் படத்தில் நடித்தால் இவருக்கு பெரிய தொகை கிடைக்கும் என்று நினைத்து இந்த படத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். அதை போன்று ஹீரோவாக வரும் வாய்ப்புகளையும் கைப்பற்றி கொள்கிறார்.

எத்தனை படங்கள் தொடர்ந்து நஷ்டத்தை கொடுத்தாலும் இவர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற பேராசையுடன் சுற்றித்திரிகிறார். மேலும் இது சில தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் சந்தானம் தன்னை ஹீரோவாக மட்டும் வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.

Also read: செந்தில் கவுண்டமணி காமெடி வசனங்களை டைட்டிலாக்கும் சந்தானம்.. தொடர் பிளாப்புக்கு பிறகும் தைரியமாக எடுத்த முடிவு

அந்த வகையில் தற்பொழுது இவர் புது படத்தில் கமிட் ஆகி உள்ளார். ஏற்கனவே டிக்கிலோனா படத்தை எடுத்தவர் தான் இந்த படத்தையும் எடுக்கப் போகிறார். இந்த படத்தின் மூலம் சந்தானத்திற்கு நல்ல பெயர் கிடைத்தது. மேலும் இந்த படத்தில் உள்ள ஒரு பாட்டு பட்டி தொட்டி என்று எல்லா பக்கமும் பரவியது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தில் மறுபடியும் ஹீரோவாக சந்தானம் நடிக்கப் போகிறாராம். இந்த டைட்டில் கேட்டாலே நமக்கு ஞாபகம் வருவது கவுண்டமணி செந்தில் காமெடி தான். அந்த டயலாக் எடுத்து சந்தானம் நடிக்க போறார் என்றால் அதற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

Also read: சிவகார்த்திகேயன் போல் மாட்டிக்கொண்டு முழிக்கும் சந்தானம்.. பழைய ரூட்டை கையில் எடுத்த கொடுமை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்