தனுஷ் படத்துடன் நேருக்கு நேர் மோதும் சந்தானம்.. அவசரப்பட்டுட்டியே குமாரு!

தனுஷ் நடிப்பில் உருவாகி நீண்ட காலமாக வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படம் தற்போது மெல்ல மெல்ல தியேட்டர் ரிலீஸுக்கு வரும் நிலையில் அதற்கு போட்டியாக சந்தானத்தின் புதிய படம் ஒன்று வெளியாக உள்ளதாம்.

சந்தானம் பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் ரசிகர்களை கவரும் அளவுக்கு சிறப்பான படங்கள் வெளிவரவில்லை. கடைசியாக சந்தானம் நடிப்பில் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் என்றால் அது ஏ1 படம் தான்.

இதனால்தான் அதே கூட்டணியை நம்பி வெகுவிரைவில் பாரிஸ் ஜெயராஜ் என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளனர். கானா பாடல் கலைஞர்களின் வாழ்க்கை வரலாற்றை நக்கல் நையாண்டியுடன் காமெடி கலாட்டாவாக கொடுத்துள்ளார்களாம்.

சமீபத்தில் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை உறுதி செய்து விட்டார்களாம். வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி பாரிஸ் ஜெயராஜ் படம் வெளியாக உள்ளது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

paris-jayaraj-cinemapettai
paris-jayaraj-cinemapettai

ஆனால் அதே தேதியில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படமும் வெளியாக உள்ளதாம். இரண்டு படமும் ஒரே நாளில் வெளியானால் பெரும்பாலும் தனுஷ் படத்திற்கு தியேட்டர்கள் அதிகமாக கிடைக்கும்.

jagame-thanthiram-cinemapettai
jagame-thanthiram-cinemapettai

இந்நிலையில் பாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 100 சதவீத பார்வையாளர்கள் இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் 50 சதவீத பார்வையாளர்கள் இருக்கும் போது கண்டிப்பாக தனுஷ் படத்திற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள் என்பது தெரிந்த விஷயம் தானே.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்