தெலுங்குப் பட ரீமேக்கில் கமிட்டாகி கெத்து காட்டும் சந்தானம்.. அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் 5 தமிழ் படங்கள்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது பிசியான நடிகராக மாறி உள்ள நடிகர் சந்தானம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுள்ளார்.

அதேபோல் சந்தானம் டைமிங், ரைமிங் ஆகியவற்றுடன் கூடிய காமெடிகளை செய்து பலரது மனதை வென்றதோடு, தனது படங்களிலும் அதே டெக்னிக்கை ஃபாலோ செய்கிறார்.

மேலும் சந்தானத்தின் கைவசம் ‘சர்வர் சுந்தரம்’, ‘டிக்கிலோனா’, ‘மன்னவன் வந்தானடி’, ‘சபாபதி’, ‘ஹாரிஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் சந்தானம் புதிதாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏனென்றால் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த தெலுங்கு படம்தான் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரியா’. இந்தப் படத்தின் ரீமேக்கில் தான் சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.

santhanam-cinemapettai

அதேபோல் இந்தப் படத்தை வஞ்சகர் உலகம் திரை படத்தின் இயக்குனரான மனோஜ் பீதா இயக்கம் உள்ளதாகவும், ஹீரோயினாக ரியா சுமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து முடிந்த வருவதாகவும், விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்