விஜய்சேதுபதியின் சூப்பர் ஹிட் பட இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக சந்தானம்.. அந்தப் படத்திற்கு இவரா?

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோவாகும் உருவெடுத்துள்ளவர் தான் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் கூட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் ரசிகர்களிடையே அதிரடி வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலேயே விஜய் சேதுபதி தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். அடுத்ததாக கத்ரீனா கைப் ஜோடியாக ஒரு படம், மாநகரம் பட ஹிந்தி ரீமேக், வெப் சீரிஸ் என பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் சினிமா கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்தது கோகுல் இயக்கத்தில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம். 2013ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தற்போது இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமாக கொரானா குமார் என்ற கதையை எழுதி தயாராக வைத்துள்ளாராம் இயக்குநர் கோகுல். இதன் அறிவிப்பு கூட சமீபத்தில் அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

கொரானா குமார் படத்தில் மீண்டும் தன்னுடைய பழைய காமெடி பாணியில் விஜய் சேதுபதி களமிறங்குவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அந்த படத்தில் காமெடி ஹீரோவாக வலம் வரும் சந்தானம் நடிக்க உள்ளாராம். சந்தானம் சமீபகாலமாக ஹீரோவாக நடிக்கும் படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் கொரானா குமார் படம் தனக்கு சூப்பர் ஹிட்டாக அமையும் என ரொம்ப நம்பி உள்ளாராம்.

இருந்தாலும் விஜய் சேதுபதி அளவுக்கு சந்தானத்தின் நடிப்பு ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம்தான். சந்தானத்திற்கு கவுண்டர் காமெடிகளை தவிர இயல்பான காமெடிகள் வராது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் இந்த புதிய முயற்சி சந்தானத்திற்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

corona-kumar
corona-kumar
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்