அடி விழுந்தால் தான் அம்மி நகரூம்.. ரூம் போட்டு கதறி அழும் சந்தானம்

சரிவு ஏற்பட்டால் தான் வாழ்க்கையில் சில விஷயங்களை யோசித்து செயல்பட முடியும். அப்படி சில வருடங்களாகவே, நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அலட்டிக் கொண்டிருந்த சந்தானம், இப்பொழுது விழுந்த பெரிய பெரிய அடிகளால் பலத்த யோசனையில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் புஸ்ஸுன்னு போகவே, புதுப்புது திட்டங்களை யோசித்து செயல்படும் முனைப்பில் இருந்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக திரும்ப காமெடி பண்ணலாம் என்ற ஒரு எண்ணமும் அவருக்கு இருந்துவருகிறது.

Also read: எவ்வளவு அடி வாங்கினாலும் நான் ஹீரோதான்.. வயிற்றெரிச்சலை கிளப்பி வெறுப்பை சம்பாதிக்கும் சந்தானம்!

சபாபதி, குலு குலு, பாரிஸ் ஜெயராஜ், பிஸ்கோத் போன்ற படங்கள் இவருக்கு அட்டர் பிளாப் ஆனது. இது அவருக்கு ஒரு பெரிய அடியாக பார்க்கப்படுகிறது. இப்படி ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவருடைய கேரியர் மொத்தத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே சந்தானம், ஆர்யா கூட்டணியில் ராஜேஷ் இயக்கிய “பாஸ் என்ற பாஸ்கரன்” படம் சக்கை போடு போட்டது. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ராஜேஷ் திட்டமிட்டுள்ளார். ஆனால் சந்தானம் ஹீரோவாக மட்டுமே நடிப்பதால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.

Also Read: டயட் என்ற பெயரில் உடம்பை மோசமாக்கிய 5 பிரபலங்கள்.. நோயாளிபோல் மாறிய சந்தானம்

இப்பொழுது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க எண்ணிய , சந்தானத்தை செகண்ட் ஹீரோவாக போடும் திட்டத்தில் இணைந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அனேகமாக கூடிய விரைவில் இரண்டாம் பாகம் வரும்.

சந்தானம் பழைய மாதிரி காமெடி ரோல்கள் பண்ணினால் அவரது சினிமா கேரியர் நன்றாக அமையும் என்று எல்லோரும் பேசி வருகின்றனர். ஹீரோவாக நடித்து சமீபத்திய தோல்வி படங்கள் அனைத்தும் அவருக்கு ஒரு பெரிய யோசனையை கொடுத்து வருகிறது.

அடுத்து வரும் கால கட்டங்களில் அனேகமாக சந்தானம் பழைய மாதிரி ஹீரோவையே கலாய்க்கும் காமெடி ரோல்கள் பண்ணினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை .அடிமேல் அடி விழுந்தால் அப்படித்தான் பண்ணியாக வேண்டும் இல்லை என்றால் அவரது சினிமா கேரியர் கேள்விக்குறியாகிவிடும்.

Also read: அவமானப்பட்ட சந்தானம்.. பேராசையால் எடுத்த விபரீத முடிவு