சாண்டியின் முன்னாள் மனைவி சன்டிவி சீரியலில் ரீஎன்ட்ரி! கெத்து காட்டும் புது கெட்டப்!

சமீபகாலமாக சின்னத்திரையிலும் மற்றும் வெள்ளித்திரையிலும் தலைகாட்டாமல் இருந்த சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவி காஜல் பசுபதி, தற்போது பிரபல தொலைக்காட்சியில் தனது ரீ என்ட்ரியை கொடுத்துள்ளார். இவரின் வருகையால் தற்போது அந்த சீரியல் கலைகட்டி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் சற்றே விறுவிறுப்புடன் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய சீரியல் தான் கண்ணான கண்ணே. தற்போது இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் டிஆர்பியிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த சீரியலில் தந்தை, மகளுக்கான பாசப் போராட்டத்தை கதையின் கருவாக கொண்டு இயக்கியுள்ளனர். இந்தக் கதையில் தந்தை கதாபாத்திரத்தில் நடிகர் பப்லு பிரித்திவிராஜும், ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் ராகுல் ரவியும், ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிகை நிமிஷிதாவும் நடித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து போலீஸ் கதாபாத்திரத்தில் நடிகை காஜல் பசுபதி தற்போது கமிட்டாகியுள்ளாராம். இவரின் வருகையால் சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டே களைகட்டி வருகிறது. அத்துடன் இவரின் வருகையை அறிந்த ரசிகர்களும் இனி வரவிருக்கும் கண்ணான கண்ணே எபிசோடுகளில் பரபரப்பான திருப்பங்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கின்றனர்.

kajal-cinemapettai
kajal-cinemapettai

சமூக வலைதளங்களில் தனது ரசிகர்களுடன் தொடர்ந்து இணைந்தே இருக்கும் நடிகர் பப்லு ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படத்தில் நடிகர் பப்லுவும், நடிகை காஜல் பசுபதியும் இணைந்து செல்பி எடுப்பது போன்ற போஸ் இடம்பெற்றுள்ளது.

இந்த புகைப்படத்தின் மூலம் சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவி நடிகை காஜல் பசுபதி, தற்போது கண்ணான கண்ணே சீரியலில் கமிட்டானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்