போடா சு***.. ரசிகரை அசிங்கமாக திட்டிய சாண்டியின் முன்னாள் மனைவி

நடன இயக்குனர் சாண்டியின் முன்னாள் மனைவி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர் ஒருவரை படுகேவலமாக திட்டிய பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிர்ப்பை இப்படியெல்லாம் காட்ட வேண்டுமா என எதிர்மறை கருத்துக்கள் எழுந்துள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடன இயக்குனர் சாண்டி. இவர் முன்னதாக கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் நடன இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடன இயக்குனராக இருக்கும் சாண்டி, காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது சாண்டி வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டின் இரண்டாவது மனைவியை விட காஜல் அளவுக்கதிகமாக அவரைக் கொஞ்சி பதிவுகள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதுமே சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துக்களை ஏற்படுத்துபவராக இருப்பவர் காஜல். அந்த வகையில் தற்போது அரசியல் களம் சூடு பிடித்துள்ளதால் காஜல் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பிஜேபிக்கு ஓட்டுப் போடக் கூடாது எனும் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

kajal-pasuapthy-fb-post
kajal-pasuapthy-fb-post

ஏன் அப்படி சொல்கிறீர்கள்? என்று ரசிகர் ஒருவர் எடக்கு முடக்காக கேட்டதற்கு போடா சு** என்ற படு கேவலமான வார்த்தையை சொல்லி திட்டியுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக பிரபலங்களும் ரசிகர்கள் ரேஞ்சுக்கு இறங்கி சமூக வலைதளங்களில் சண்டை போட்டு வருகின்றனர் என்பதும் கூடுதல் தகவல்.

- Advertisement -