புதன்கிழமை, நவம்பர் 13, 2024

முதல் நாளே வெளியேறிய சாச்சனா.. சூட்டோடு சூடாக வெளியேறும் அடுத்த போட்டியாளர்

Bigg Boss Tamil : விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த முறை அதிகம் பரிச்சயமான போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதம் பலருக்கும் பிடித்திருந்தது.

எப்போதுமே முதல் வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் நடத்தப்படாது. ஏனென்றால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும், மக்களுக்கும் அவர்களின் சுய முகம் தெரிய வேண்டும் என்பதற்காக இரண்டாவது வாரத்தில் இருந்து தான் எலிமினேஷனை தொடங்குவார்கள்.

ஆனால் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வீட்டிற்கு வந்த முதல் நாளே சக போட்டியாளர்களின் ஓட்டுக்கல் அடிப்படையில் சாச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். இதற்கு ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் மக்கள் ஓட்டு போட்டால் தான் எலிமினேஷன் செய்ய வேண்டும்‌.

சாச்சனாவை தொடர்ந்து வெளியேறும் அடுத்த போட்டியாளர்

அதுவும் முதல் நாளே சாச்சனாவுக்கு அநியாயம் பிக் பாஸில் நடந்துள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் இப்போது இவர் சென்ற சூட்டோடு சூட்டாக தயாரிப்பாளர் ரவீந்தரும் பிக் பாஸ் வீட்டை விட்டு செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த பிக் பாஸ் சீசன்களை ரிவ்யூ செய்தவர்தான் ரவீந்தர்.

இந்த முறை அவரே பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. இந்நிலையில் இப்போது பிக் பாஸ் வீட்டினுள் ரவீந்தருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நடக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். மேலும் ரூமில் இருந்து ரஞ்சித் மற்றும் அருண்பிரசாந்த் ஆகியோர் கைதாங்களாக ரவீந்தரை அழைத்து வருகிறார்கள்.

ஆகையால் மருத்துவர் சிகிச்சை செய்து பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே ரவீந்தர் தாக்குப் பிடிப்பாரா அல்லது தன்னால் முடியவில்லை என்று வீட்டை விட்டு வெளியேற போகிறாரா என்பது விரைவில் தெரியவரும். இப்போது இருக்கும் உடல் நிலை காரணமாக பிக் பாஸ் வீட்டிலிருந்த ரவீந்தர் வெளியே வர தான் அதிக வாய்ப்பு உள்ளது‌.

ஆரம்பமே ரணதனமாகவும் பிக் பாஸ் வீடு

- Advertisement -spot_img

Trending News