இரண்டாவது காதலரை கண்டுபிடித்த சனம் ஷெட்டி.. கை கோர்த்தபடி வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் சனம் செட்டி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சனை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகார் சொல்லிக் கொண்டனர். மேலும் தனக்கு வந்த பிக்பாஸ் வாய்ப்பை தர்ஷனுக்கு கொடுத்து அவரை ஸ்டார் ஆக்கி விட்டதாகவும் சனம் செட்டி புகார் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சனம் செட்டி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். ஆரம்பத்தில் வெறுக்கப்பட்டு பின்னர் ரசிகர்களால் அரவணைக்கபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தர்ஷன் மற்றும் சனம் செட்டி காதல் முறிவுக்கு தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது நீச்சல் உடையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு சனம் ஷெட்டி பேட்டி கொடுத்தது தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சனம் ஷெட்டி அடுத்தடுத்து சில படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய புதிய காதலருடன் கைகோர்த்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் சனம் ஷெட்டி.

sanamshetty-secondlover-cinemapettai
sanamshetty-secondlover-cinemapettai

இதன்மூலம் சனம் செட்டி இரண்டாவது முறையாக காதலில் வெளிவந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனை ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வரவேற்று அந்தப் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்