பிக்பாஸ் சனம் ஷெட்டியின் இரண்டாவது காதலர் இந்த நடிகர் தானாம்.. நெருங்கி நடித்ததால் ஏற்பட்ட காதல்!

சனம் ஷெட்டி என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். ஆரம்பத்தில் ரசிகர்களால் வெறுக்கப்பட்டு கடைசியில் அதே ரசிகர்களால் அரவணைக்கப்பட்டவர் சனம் ஷெட்டி. அதன்பிறகு விஜய் டிவியின் சூழ்ச்சியால் பிக்பாஸ் வீட்டைவிட்டு பாதியிலேயே வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சனம் ஷெட்டி. இந்நிலையில் சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய இரண்டாவது காதலருடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சனம் ஷெட்டி முதன்முதலில் தர்ஷன் என்பவரை காதலித்தார் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தர்ஷன் கலந்துகொண்டபோது வெளியில் அவரை புரமோட் செய்வதற்காக யூடியூப் தளத்திற்கு பிகினி பேட்டி கொடுத்ததால் அவர்களின் காதல் பல பிரச்சனைகளை சந்தித்து இறுதியில் முடிவு பெற்றது.

இதற்கிடையில் தர்ஷன் தன்னை நிச்சயம் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக கத்தினார் கதறினார் சனம் ஷெட்டி. ஆனால் காது கொடுத்து கேட்க ஆளில்லை. இந்நிலையில்தான் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை நிரூபித்தார்.

மீண்டும் காதலில் விழுந்த சனம் செட்டி காதலர் தினத்தில் பிரபலம் ஒருவரின் கை கோர்த்தபடி புகைப்படம் வெளியிட்டார். அது யாராக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தது. அவர் வேறு யாரும் இல்லையாம்.

sanamshetty-new-lover-cinemapettai
sanamshetty-new-lover-cinemapettai

அடுத்ததாக சனம் ஷெட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படத்தில் ஹீரோ தானாம். அப்படத்தில் காதல் காட்சிகளில் நெருங்கி நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டதாக அந்த பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்