அர்ச்சனாவின் பாத்ரூம் டூர் வீடியோவை பங்கமாக கலாய்த்த சனம் ஷெட்டி.. இவ்வளவு ஓப்பனாவா அசிங்கப்படுத்துவீங்க!

அர்ச்சனா எந்த நேரத்தில் விஜய் டிவியில் காலை எடுத்து வைத்தாரோ அன்றிலிருந்து அவருக்கு பிடித்தது சனி. போறவங்க வர்றவங்க எல்லாம் கண்டபடி திட்டும் அளவுக்கு ஆகிவிட்டது அவரது நிலைமை.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நல்ல தொகுப்பாளர் என்ற பெயருடன் வலம் வந்தார் அர்ச்சனா. பேசாமல் அங்கேயே இருந்திருந்தால் தலை தப்பித்திருக்கும். ஆனால் வான்டட்டாக விஜய் டிவிக்கு சென்று வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோதே அர்ச்சனாவுக்கு ஏகப்பட்ட நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்தன. அதை எல்லாம் புரிந்து கொண்டு சும்மா இருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு யூடியூப் சேனல் தொடங்கிய அதில் வீடியோ போட்டுக் கொண்டிருந்தார்.

அதிலும் ஆரம்பத்தில் நல்ல முறையாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் எந்த நேரத்தில் பாத்ரூம் டூர்(bathroom tour) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினாரோ அதோடு முடிந்தது அவரது சோலி. சின்ன யூடியூப் சேனல் முதல் பெரிய யூடியூப் சேனல் வரை மொத்தமும் வச்சு செஞ்சு விட்டார்கள். போதாக்குறைக்கு தரக்குறைவான விமர்சனங்களும் அர்ச்சனா மீது வைக்கப்பட்டது.

இதனால் கடுப்பான அர்ச்சனா ஒருபக்கம் தன்னுடைய தரப்பு வாதத்தை எடுத்து வைக்க, இன்னொருபுறம் கார்ப்பரேட் கிரிமினல் என்ற பெயர் அவருக்கு வர மொத்தமும் முடிந்து தற்போது கப்சிப் என இருந்து வருகிறார். கூடிய சீக்கிரம் விஜய் டிவியில் அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் இருந்தும் அவரை தூக்கி விடுவார்கள்.

பலரும் இதை கவனித்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற சனம் ஷெட்டி அர்ச்சனாவை கிண்டல் செய்யும் விதமாக, ஆயிரத்தெட்டு பிரச்சினை இந்த நாட்டுல, உங்க பாத்ரூம் பிரச்சனையை வெச்சுக்கோங்கம்மா உங்க வீட்டுல என கிண்டலடித்துள்ளார். இந்த பதிவுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது குறிப்பிட வேண்டியுள்ளது.

sanam-shetty-bathroom-tour-tweet
sanam-shetty-bathroom-tour-tweet
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்