சூப்பர் ஹிட் மலையாள பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் சமுத்திரக்கனி! தூள் கிளப்பும் அப்டேட்

ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி நாடக இயக்குனராக அறிமுகமாகி, அதன் பின் தமிழ் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சமுத்திரகனி.

இவருடைய இயல்பான நடிப்பினால் ரசிகர்களின் மத்தியில் இவருடைய படத்திற்கு தனி எதிர்பார்ப்பு நிலவி வரும். தற்போது சமுத்திரக்கனி மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை சாகர் K. சந்திரா இயக்கவிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு வசனம் எழுதும் திரிவிக்ரம் சமுத்திரக்கனியை அணுகி அவருக்கென்று தனி கதாபாத்திரம் உருவாகி இருப்பதாகவும், கண்டிப்பாக அவர் தான் நடிக்க வேண்டும் என கேட்டுள்ளதால், அதற்கு சமுத்திரகனி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ayyappanum-koshiyum-remake-01
ayyappanum-koshiyum-remake-01

மேலும் சமுத்திரகனி தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சமுத்திரக்கனி தெலுங்கில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிப்பதை தொடர்ந்து, மீண்டும் மற்றொரு தெலுங்கு சூப்பர் ஹிட் படத்தில் நடிக்கவிருப்பது தெலுங்கு திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்