ஒரே நாளில் OTTயில் வெளியாகும் சமுத்திரகனியின் 2 முக்கிய படங்கள்.. எனக்கு வேற வழி தெரியல பாஸ்

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருபவர் சமுத்திரக்கனி. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தற்போது சமுத்திரகனி நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

சமுதாயக் கருத்துக்களை மையமாக வைத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான அப்பா மற்றும் தொண்டன் படங்கள் இன்றுவரை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. ஆனால் சமீபகாலமாக சமுத்திரகனி படங்களில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட தெலுங்கு படத்தில் வில்லனாக கலக்கி இருந்தார். தற்போது பிரமாண்ட படமான ஆர் ஆர் ஆர் படத்தில் ராஜமௌலி சமுத்திரக்கனிக்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் படம் டான் மற்றும் சர்கார் வாரி பட்டா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

udanpirappe
udanpirappe

தற்போது பிசியாக நடித்து வரும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவான வினோதய சித்தம் மற்றும் உடன் பிறப்பே இந்த 2 படங்களையும் OTTதளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் தற்போது படக்குழுவினர் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சமுத்திரக்கனிக்கு இந்த படங்கள் திரையரங்கில் வெளியாக வேண்டும் என்று படக்குழுவினரிடம் கூறியுள்ளார். முதலில் சம்மதம் தெரிவித்த படக்குழுவினர் அதன் பிறகு வேறு வழியின்றி OTTதளத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனால் சமுத்திரகனி தற்போது எனக்கு வேறு வழி தெரியவில்லை என புலம்பி வருவதாக கூறிவருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்