சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சேரும் விஜய் டிவி பிரபலம்.. திறமையில் அவருக்கு இவர் சளைத்தவர் இல்லை

மிகக்குறுகிய காலத்திலேயே புதுமையான பலவித ரியாலிட்டி ஷோக்கள் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற தொலைக்காட்சி விஜய் டிவி. நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் சன் தொலைக்காட்சிக்கு இணையான ரசிகர்களை விஜய் டிவி பெற்றுள்ளது.

மற்ற தொலைக்காட்சிகளில் வேலை பார்ப்பவர்களும் விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்க அலைகிறார்கள். ஏனென்றால் விஜய் டிவிக்கு போன போதும்பா நம்மை எப்படியாவது ஏற்றி விட்டுடுவாங்க என பலரும் எண்ணுகிறார்கள்.

ஆரம்பத்தில் சந்தானம் முதல் தற்போது குத் வித் கோமாளி புகழ் வரை பல பிரபலங்களை வெள்ளித்திரைக்கு அனுப்பி உள்ளது விஜய் டிவி. தற்போது உச்சத்தில் உள்ள சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரும் விஜய் டிவியில் இருந்து வந்தவர்கள்தான்.

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் காமெடியனாக பங்குபெற்று அதன்பின் பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக பங்கு பெற்றார். இவர் தொகுத்து வழங்கிய அது இது எது ஷோ ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதன் பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து மெரினா படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை பெற்றிருக்கிறார்.

சாய்பல்லவி விஜய் டிவியில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அதன் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்து புகழ் பெற்றார். தற்போது சாய்பல்லவி முன்னணி நடிகையாக உள்ளார்.

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி இருவருமே நல்ல நடனமாட கூடியவர்கள். தற்போது சிவகார்த்திகேயனின் 21 ஆவது படத்தில் சாய்பல்லவி நடிக்க உள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்கிறது. விஜய் டிவியில் இருந்து வந்த இருவரும் முதல் முறையாக இணையப் போவதால் இப்படம் ரசிகர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை