வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

நாக சைதன்யா ஒரு எமன்.. நேரடியாக பிரபலத்தை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய சமந்தா

பிரபல நடிகையாக இருக்கும்போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா சில வருடங்களுக்கு முன்பு அவரை விட்டு பிரிந்தார். இவர்களுடைய இந்த முடிவுக்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும் சம்பந்தப்பட்ட இருவரும் எதுவும் கூறாமல் இருந்தனர்.

தற்போது தன்னுடைய திருமண முறிவு பற்றி சமந்தா பிரபல நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பாளரும், இயக்குனருமான கரண் ஜோகர் நடத்தி வரும் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

அதில் முன்னணியில் இருக்கும் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றுவார்கள். சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் பங்கேற்றனர். அதில் சமந்தாவிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு மிகவும் சுவாரஸ்யமாக பதிலளித்த சமந்தா தன்னுடைய திருமண வாழ்வு குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர் நாக சைதன்யாவை ஒரு எமன் என்றும், அவர் என்னை அடிக்கடி துன்புறுத்துவார் என்றும் கூறியது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் அவரால் வீட்டில் எப்போது ஐ டி ரெய்டு நடக்கும் என்று நான் தூங்காமல் பயத்தோடு இருப்பேன் என்று கூறியுள்ளார். மேலும் எங்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டைதான் நடக்கும். அதனால் எங்கள் திருமண வாழ்வு அவ்வளவு இணக்கமாக அமையவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அப்போது கரண் ஜோகர், சமந்தாவிடம் உங்கள் கணவர் என்று நாக சைதன்யாவை கூறினார். இதனால் கோபமடைந்த சமந்தா கணவர் இல்லை முன்னாள் கணவர் என்று கூறி கரண் ஜோகரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் சமந்தா பல நாள் கேள்விகளுக்கு விடை அளித்துள்ளார்.

மேலும் சமந்தாவுக்கு திருமண வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனைகள் இருந்துள்ளதா என்று இந்நிகழ்ச்சியை பார்த்த அவரின் ரசிகர்கள் பரிதாபப்பட்டு வருகின்றனர். சமந்தாவின் இந்த பேச்சு இப்போது பரப்பரப்பை கிளப்பிய நிலையில் இது குறித்து நாக சைதன்யா எந்த பதிலும் அளிக்கவில்லை.

- Advertisement -

Trending News