இந்த ரெண்டு நடிகரும் மெண்டல்ஸ்.. குண்டைத் தூக்கிப் போட்ட சமந்தா

வாய மூடிட்டு சும்மா இருடா குரங்கு என வடிவேலு சொல்லும் டயலாக் தற்போது சமந்தா எந்த விஷயம் பேசினாலும் அவருக்கு பொருத்தமாக இருக்கிறது. ஏற்கனவே பல பஞ்சாயத்துகளில் இருக்கும் சமந்தா தற்போது எந்த பதிவு போட்டாலும் அது சர்ச்சையாக மாறிவிடுகிறது.

சமீபத்தில் நடிகை சமந்தா தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யா விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி இந்த செய்தி பத்திரிகைகளுக்கு கிடைக்க இஷ்டப்படி இருவரது விவகாரத்தைப் பற்றி எழுதித் தள்ளிவிட்டனர்.

ஆனால் வழக்கம் போல் இருவரும் தங்களுடைய விவாகரத்துக்கான காரணம் என்ன என்பதை சொல்லாமல் விவாகரத்து மட்டும் செய்து கொள்கிறோம் என்று சொன்னதால் வந்த வினை தான் இது. அதன் பிறகு தன்னைப் பற்றி தவறாக பேசிய மீடியாக்கள் மீது கேஸ் போடப் போகிறேன் என சமந்தா கூறியதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

அதுமட்டுமில்லாமல் விவாகரத்திற்கு பிறகு தினமும் ஏதாவது ஒரு பதிவை கணவரை குத்திக் காட்டும் வகையில் போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் சமந்தா. விவாகரத்து பெற்ற பிறகு நாகசைதன்யா தான் உண்டு தன் வேலை உண்டு என அமைதியாக சென்று விட்டார். ஆனால் சமந்தா செய்வதையெல்லாம் பார்த்தாள் என்னமோ அவர் மீதுதான் குற்றம் இருப்பது போல் தெரிகிறது.

இது ஒருபுறமிருக்க தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இருவரும் இணைந்து நடித்திருக்கும் RRR படத்தின் புரோமோஷனல் பாடல் ஒன்று வெளியானது. இதில் இருவரும் இணைந்து நடனம் ஆடி இருந்தனர்.

இதைப் பார்த்த சமந்தா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் இந்த இரண்டு நடிகர்களும் மெண்டல் கள் என பதிவிட்டுள்ளார். அந்த அளவுக்கு நடனத்தில் சிறந்தவர் என்பதை இந்த மாதிரி பதிவிட்டது சமந்தாவுக்கு மேலும் சில நெகட்டிவ் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்