குட்டி உடையில், நாயுடன் குதித்து குதித்து விளையாடும் சமந்தா.. 1.5 மில்லியன் லைக்ஸ்

தமிழ் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி படம் மூலம் அறிமுகமானவர் சமந்தா. இருப்பினும் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படம் மூலமாகவே அனைவராலும் அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார்.

தமிழை விட தெலுங்கில் அதிக படங்கள் நடித்துள்ளார். தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்துள்ளார். திருமணமாகி நான்கு வருடங்கள் முடிந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தில் நடித்த சமந்தாவுக்கு எக்கசக்க பாராட்டுக்கள் குவிந்தது. தற்போது அவர் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை சமந்தாவுக்கு 17.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இதனால் அவர் பதிவிடும் புகைப்படங்கள் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலூன் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அவருக்கு பார்ட்னராக அவர் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி ஹாஸும் அவருடன் விளையாடுகிறது.

இந்த வீடியோ பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -