ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஜெட் வேகத்தில் போகும் நாகசைதன்யா.. ராக்கெட் போல் செயல்படும் சமந்தா

சமந்தா தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்து இருந்தார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது காலப்போக்கில் காதலாக மாறி இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் விமரிசையாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் செய்து கொண்ட பிறகும் சமந்தா நாகசைதன்யா இருவரும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தனர். இவர்கள் இருவரும் வருடத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மேல் நடித்து கொடுத்து வந்தனர். ஆனால் சமந்தா ஒரு சில படங்களில் ஆபாச வசனங்கள் மற்றும் சர்ச்சையான காட்சியில் நடிக்க ஆரம்பித்தார்.

அப்போது நாகசைதன்யா இந்த மாதிரி காட்சியில் நடிக்க தவிர்க்குமாறு கூறியுள்ளார். ஆனால் சமந்தா சினிமா என்பது நடிப்புதான் அதனை ஏன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். பின்பு இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட ஒரு சில நாட்கள் எந்தவித பேச்சுவார்த்தை மில்லாமல் தங்களது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர்.

பின்பு இருவரும் சேர்ந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். அதனால் தற்போது இருவரும் மாற்றி மாற்றி சினிமாவில் போட்டி போட்டு நடித்து வருகின்றனர். சமந்தா தென்னிந்திய சினிமாவில் நடித்து வந்தார். தற்போது பாலிவுட்டில் சல்மான் கான் படத்தில் சமந்தா நடிக்க உள்ளார். ஆனால் இப்படத்தில் 10 கதாநாயகிகள் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் சமந்தா ஹாலிவுட் வரை தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இதனை பார்த்த நாகசைதன்யா அவரும் ஹிந்தியில்அமீர்கானுடன் இணைந்து லால் சிங் சட்டா படத்தில் நண்பனாக நடித்துள்ளார். சமந்தா நாக சைதன்யா பாலிவுட் படங்கள் நடித்து விட்டனர். ஆனால் சமந்தா ஹாலிவுட் படத்தில் நடித்து இருப்பதால் தற்போது நாக சைதன்யாவும் ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளார். அதனால் நாக சைதன்யா தனது நடிப்பில் உருவாகும் படத்தை அனைத்து மொழியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

தற்போது கூட தமிழ் இயக்குனரான வெங்கட்பிரபு படத்தில் நாக சைதன்யா நடிக்க உள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. கூடிய விரைவில் நாக சைதன்யாவும் ஹாலிவுட் படத்தில் நடிப்பார் என பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News