உலகப் புகழ்பெற்ற இயக்குனர் படத்தில் நடிக்கும் சமந்தா.. 12 வருஷத்துக்கு முன்னாடி நடந்த மாதிரியே இருக்காம்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. விவாகரத்து அறிவிப்புக்குப் பின்னர் தற்போது சமந்தா அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார். அதை தொடர்ந்து தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வரும் சமந்தா மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல இயக்குனர், பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் பிரிட்டிஷ் படத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சமந்தா ஒரு டிடெக்டிவ் ஆக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சமந்தா இந்தப் படத்தில் இரு பாலின ஈர்ப்பு உடையவராக நடிக்க உள்ளார்.

அரேஞ்ச்மென்ட் ஆப் லவ் என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்வுடன் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது நான் கடைசியாக 2009 ஆம் ஆண்டு யே மாயா சேசேவுக்காக ஆடிஷன் செய்தேன்.

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நான் ஆடிஷன் செய்தபோது அதே பதட்டத்தை உணர்ந்தேன். டவுன் டான் அபே இயக்குனரின் ஆடிஷனில் கலந்து கொண்டேன். என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இந்த அற்புதமான பயணத்தை தொடங்க காத்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் இந்திய எழுத்தாளர் டைமேரி முராரி யின் அதிகம் விற்பனை செய்யப்பட்ட நாவலின் தழுவல் ஆகும். இதன் மூலம் சமந்தா உலகப் புகழ்பெற்ற இயக்குனரின் திரைப்படத்தில் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சமந்தா தற்போது இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்துள்ளார். சமந்தாவின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்