சமந்தாவுக்கு நிறைய ஆணுடன் தொடர்பு.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா சமீபத்தில் தன்னுடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்து கொண்ட விஷயம் தான் இன்றுவரை சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தினமும் சமந்தா பற்றிய செய்திகள் இல்லாமல் இல்லை.

சமந்தா சமீபகாலமாக பெரும் மன உளைச்சலில் இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக சீரடி காசி ராமேஸ்வரம் என கடவுளை நோக்கி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். நிம்மதி எங்கே கிடைக்கும் என தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறாராம் சமந்தா.

இது ஒருபுறமிருக்க சமந்தாவின் விவாகரத்திற்கு ஏகப்பட்ட காரணங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் ஒன்று தான் அவர் தன்னுடைய ஸ்டைலிஸ்ட் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் அது தெரிந்து கடுப்பான நாகசைதன்யா அவரை விவாகரத்து செய்ததாகவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என அந்த ஸ்டைலிஸ்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

samantha-naga-chaitanya-cinemapettai
samantha-naga-chaitanya-cinemapettai

ஆனால் இதுகுறித்து நாகசைதன்யா எதுவுமே பேசவில்லை எனவும் வருத்தம் தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். இப்படி ஒரு பிரச்சனை சென்று கொண்டிருக்கும் நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் வழக்கறிஞர் வெங்கட்ராவ் என்பவர் சமந்தாவுக்கு நிறைய ஆண்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தான் அவர்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டது என தெரிவித்திருந்தார். எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் இருந்தது அவரது பேச்சு.

இதனால் கடுப்பான சமந்தா தன்னைப் பற்றிய தவறான தகவல்களை பறக்கும் சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மீது வழக்கு தொடர்ந்தார். அதோடு வெங்கட்ராவ் என்பவர் மீதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இப்படி தினமும் மன உளைச்சலுக்கு ஆளாகும் சமந்தா திட்டமிட்டபடி படங்களில் சரியாக நடிக்க முடியவில்லை எனவும் ஒரு பக்கம் கவலையில் இருக்கிறாராம். அவங்கள வேலை செய்ய விடுங்க பாஸ்!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்