30 வருடங்களா முத்தக்காட்சியில் நடிக்காமல் இருந்த சல்மான்கான்.. ஆனால் இந்த பட நடிகைக்கு லிப்லாக் வச்சு செஞ்சுட்டாராம்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கான் 30 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் இதுவரை எந்த ஒரு வெள்ளித்திரையிலும் எந்த ஒரு நடிகையுடன் முத்தக் காட்சியில் நடித்ததில்லை அதற்கு என்ன காரணம் என்பதை தற்போது பார்ப்போம்.

பாலிவுட் சினிமா நம்பி கொண்டிருக்கக்கூடிய ஒரு நடிகர் என்றால் அது சல்மான் கான் தான். ஏனென்றால் சல்மான்கானின் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பும் பாராட்டுகளும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

6 ஆண்டுகளுக்கு முன்பு ஹீரோ படத்தில் ஆதியா ஷெட்டி மற்றும் சூரத் பாஞ்சாலி நடிப்பில் வெளியான ஹீரோ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக சல்மான்கான் இருந்தார்.

அப்போது ஹீரோ படத்தில் முத்தக் காட்சிகள் நீக்கப்படுவதாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சல்மான் கான் படத்தில் முத்தக் காட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை என்றும் ஆனால் படத்தில் முத்தக்காட்சியில் வைக்க விருப்பம் பட்டதாகவும் தெரிவித்தார்.

சல்மான்கான் நான் எந்த ஒரு படத்திலும் முத்த காட்சியில் நடிக்க வில்லை அப்படி இருக்கும் போது நான் எப்படி அவர்களை முத்த காட்சியில் நடிக்க சொல்ல முடியும் என கூறினார். அதுமட்டுமில்லாமல் ஒரு படத்தில் கதாநாயகிகளுக்கு முத்தம் கொடுக்காமல் இருப்பதற்கு காரணம் சங்கடமாகவும் மற்றும் அதை அசிங்கமாக உணர்வதாகவும் கூறினார்.

ஆனால் சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான ராதே படத்தின் டிரெய்லரில் இணை நடிகையான திஷா பதானி உடன் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளார்.

இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் 30 வருடகாலமாக காப்பாற்றி வந்த சல்மான்கான் ஏன் இப்படி செய்தார் எனவும் மற்ற ரசிகர்கள் எப்படியாவது சல்மான்கான் ஒரு முத்த காட்சியில் நடித்து விட மாட்டாரா என ஆதங்கத்தில் இருந்ததாகவும் அவரது ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்