சல்மான் கான் லிப் லாக் சீனை வெறுத்ததற்கு இந்த நடிகைதான் காரணமாம்..

பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சல்மான் கான் நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான படம் தான் மைனே பியார் கியா. இப்படத்தை சூரஜ் பர்ஜத்யா இயக்கி இருந்தார். இப்படத்தில் தான் நடிகை கியா பாக்யஸ்ரீ பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில் இப்படத்தில் லிப் லாக் சீன் ஒன்று இருந்துள்ளது. சல்மான் கானும் நடிகை பாக்யஸ்ரீயை முத்தமிட ஒப்புக்கொண்டார். ஆனால் பாக்யஸ்ரீ அந்த சீனில் நடிக்க மறுத்துவிட்டார். அந்த சமயத்தில் பாக்ய ஸ்ரீக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

எனவே முத்தக் காட்சி காரணமாக தனது திருமணத்தில் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காக அவர் முத்தக்காட்சியில் நடிக்க மறுத்துவிடார். பாக்யஸ்ரீ முத்தக் காட்சியில் நடிக்க மறுத்தபோது தான், ​​நடிகைகளுக்கு படப்பிடிப்பின் போது எத்தனை கட்டாயங்கள் உள்ளன என்பதை சல்மான் புரிந்து கொண்டார்.

salman khan bhagyashree
salman khan bhagyashree

இதுகுறித்து சல்மான் கான் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதாவது, “முத்தக்காட்சியில் நடிக்க வசதியாக இல்லை எனவே அந்த காட்சியை நீக்க வேண்டும் என கூறினேன். ஆனால் இயக்குனர் கூறியதாலே நடிக்க ஒப்புக்க்கொண்டேன். ஆனால் பாக்யஸ்ரீ அதில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.

பின்னர் வேறு வழியின்றி, அந்த முத்தக்காட்சி வேண்டாம் என்று இயக்குனர் சூரஜ் முடிவு செய்தார். பின்னர் எனக்கும் பாக்யஸ்ரீக்கும் இடையே ஒரு கண்ணாடி சுவரை கொண்டு வந்து, லிப்லாக் காட்சியை நிறைவு செய்தனர்” என கூறினார்.

இப்படத்திற்கு பிறகுதான் சல்மான் எந்த திரைப்படத்திலும் முத்த காட்சியிலோ அல்லது லிப்லாக் காட்சியிலோ நடிக்கப் போவதில்லை என முடிவு செய்தார். இதன் காரணமாகவே டைகர் ஜிந்தா ஹாய் படத்தில் கத்ரீனாவுடன் லிப் லாக் சீனில் நடிக்க மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -