திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வைத்த சிவகார்த்திகேயன்.. சீமராஜா படத்திற்கு வாங்கிய சம்பளம்

சின்னத்திரையில் இருந்து தனது கடின உழைப்பால் ஹீரோ என்ற அந்தஸ்தை சிவகார்த்திகேயன் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் காமெடி படங்களாக தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றி மகுடத்தை சூடி வந்தார். ஆனால் நடுவில் மிகப்பெரிய சருக்களை சந்தித்தார். அதன் பின்பு டாக்டர், டான் என 100 கோடி வசூல் படத்தை கொடுத்து மீண்டும் தான் விட்ட இடத்தை பிடித்தார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் படுதோல்வியை தழுவியது. இதனால் சுதாகரித்துக் கொண்ட சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் குறித்த அப்டேட்க்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Also read: சிவகார்த்திகேயனை பழி தீர்க்க களமிறங்கும் தனுஷ்.. இந்த வாட்டி சும்மா விடுறதா இல்ல

இப்போது சிவகார்த்திகேயன் கேரியரில் மிக மோசமான தோல்வி அடைந்த சீமராஜா படத்தில் அவர் வாங்கிய சம்பளம் வெளியாகி உள்ளது. பொன்ராம் இயக்கிய சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன், சூரி போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் போட்ட வசூலை கூட எடுக்க முடியாமல் திணறியது.

மேலும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய சருக்களை இந்த படம் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சீம ராஜா படத்திற்கு சிவகார்த்திகேயன் 18 கோடி சம்பளமாக பெற்றிருந்தாராம். ஆனால் படம் படுதோல்வி அடைந்ததால் தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டது தான் மிச்சம்.

Also read: வித்தியாசமான கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்த 5 படங்கள்.. சுத்தமாக செட்டாகாத போலீஸ் கதாபாத்திரம்

அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனும் சில படங்களை தயாரிப்பதாக இறங்கி கடனில் அவதிப்பட்டு வந்தார். இப்போது ஓரளவு கடனை எல்லாம் சரி செய்து விட்டார். மேலும் இப்போது சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 25 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஹீரோக்கள் ஒரு படம் ஹிட் கொடுத்து விட்டால் உடனே தங்களது சம்பளத்தை அதிகபடியாக உயர்த்தி விடுகிறார்கள். ஆனால் தோல்வி அடைந்தால் அதே சம்பளம் தான் அடுத்தடுத்த படங்களில் வாங்கி வருகிறார்கள். இந்த விஷயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் தோல்வி படம் கொடுத்தால் அடுத்த படத்தில் சம்பளத்தை குறைத்துக் கொள்வார்.

Also read: கமலுக்காக ரிஸ்க் எடுக்கும் சிவகார்த்திகேயன்.. விரைவில் வெளிவர இருக்கும் புதிய அப்டேட்

- Advertisement -

Trending News