சேர்க்கை சரியில்ல, ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்.. 95 நாள் தாக்கு பிடித்த விசித்ராவின் மொத்த சம்பளம் இதுதான்

Vichitra Salary: பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இந்த வாரம் விசித்ரா அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். பொதுவாக 50 வயதை கடந்த போட்டியாளர்கள் சில வாரங்களுக்கு மேல் இந்த நிகழ்ச்சியில் தாக்குப் பிடிக்க மாட்டார்கள்.

ஆனால் விசித்ரா இளைய தலைமுறைக்கு ஈடாக தன் கெத்தை காட்டியதோடு ரசிகர்களின் ஆதரவையும் பெற்றார். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தினேஷின் பர்சனல் விஷயங்களை அவர் விமர்சித்ததும், மாயாவுடன் சேர்ந்ததும் தான் இதற்கு காரணம்.

இப்படி சேர்க்கை சரியில்லாததால் ஓட்டு எண்ணிக்கையில் இவர் கொஞ்சம் சரிவை சந்தித்தார். ஆனாலும் மாயா தான் ஓட்டு நிலவரத்தில் கடைசி இடத்தில் இருந்தார். அவரை காப்பாற்ற தான் விஜய் டிவி விசித்ராவை பலியாடாக மாற்றிவிட்டது.

Also read: பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர்தான்.. ஆண்டவருக்கு முன்பே தில்லாக சொன்ன பூர்ணிமா

அதனாலேயே இந்த எலிமினேஷன் கடும் அதிருப்தியை சந்தித்துள்ளது. இருந்தாலும் விஜய் டிவியின் முடிவு தான் இறுதி என்பது நாம் அறிந்தது தான். அந்த வகையில் 95 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த விசித்ராவின் சம்பளம் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

அதன்படி சீனியர் நடிகையான இவருக்கு ஒரு நாளைக்கு 30,000 வரை சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அதை வைத்து கணக்கிடும்போது 95 நாட்களுக்கு 28,50,000 இவர் சம்பளமாக பெற்றுள்ளார். இது அதிகபட்ச சம்பளம் தான் என்றாலும் டைட்டிலை அவர் தவறவிட்டது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

Also read: பிரதீப் ரெட் கார்ட் பற்றி கேட்கப்பட்ட கேள்வி.. வாயை கொடுத்து மாட்டி கொண்ட பூர்ணிமா

இவ்வளவு நாட்கள் ஒரு கடுமையான போட்டியாளராக இருந்து விட்டு கடைசி நேரத்தில் அவர் வெளியேற்றப்பட்டது தற்போது விமர்சனமாக மாறி இருக்கிறது. ஆனாலும் மாயாவை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல தயாராகும் விஜய் டிவி இறுதிப்போட்டியிலும் ட்விஸ்ட் வைக்க இருக்கிறது.