ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

நயன்தாராவை பழி வாங்கினாரா அண்ணாச்சி! ‘தி லெஜண்ட்’ பட நடிகையின் சம்பளம் இத்தனை கோடியா?

கோலிவுட் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் சமந்தா உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள தி லெஜண்ட் படத்தில் நடித்த நடிகையின் சம்பளம் வெளியாகியுள்ளது.

அதாவது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி விளம்பரங்களில் நடிக்கும் போதும் ஹன்சிகா, தமன்னா என முன்னணி நடிகைகளுடன் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தற்போது அண்ணாச்சி கதாநாயகனாக நடித்திருக்கும் தி லெஜண்ட் படத்தின் ஆடியோ பங்ஷனுக்கு கோலிவுட், பாலிவுட் என 10க்கும் மேற்பட்ட நடிகைகளை வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

இதற்காகவே அண்ணாச்சி பெரிய தொகையை செலவழித்துள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் தி லெஜண்ட் படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவை படக்குழு தேர்வு செய்திருந்தது. படத்தில் இவருடைய நடனம் ரசிகர்களால் வெகுவாக கவர்ந்தது.

ஆரம்பத்தில் தி லெஜண்ட் படத்திற்கு படக்குழு நயன்தாராவை அணுகியுள்ளனர். நயன்தாரா தற்போது மாஸ் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனால் அண்ணாச்சிக்கு ஜோடியாக தன்னால் நடிக்க முடியாது என இந்த பட வாய்ப்பை நயன்தாரா மறுத்துவிட்டாராம்.

அதன்பிறகுதான் ஊர்வசி ரவுடேலா இப்படத்தில் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் தற்போது நயன்தாரா ஒரு படத்திற்கு 10 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். இதனால் தன்னுடன் நயன்தாரா நடிக்க மறுத்ததால் அவரை விட இரண்டு மடங்கு, அதாவது 20 கோடி ஊர்வசிக்கு சம்பளமாக கொடுத்துள்ளார் அண்ணாச்சி.

இதனால் கோலிவுட்டில் நம்பர்-1 நடிகையாக இருக்கும் நயன்தாராவின் சம்பளத்தையே அண்ணாச்சி பட நடிகை ஓரம்கட்டி உள்ளதால் கோடம்பாக்கத்தில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ஊர்வசி ரவுடேலாவுக்கு தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News