வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

90களில் நடிகர்கள் வாங்கிய சம்பள பட்டியல்.. உலக நாயகனை விட 3 மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கிய ரஜினி

தமிழ் சினிமாவில் 90களில் மார்க்கெட்டில் இருந்த டாப் 10  நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்கினார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்போது வரை திரையில் மோதிக் கொள்ளும் கமல், ரஜினி இருவரில் சூப்பர் ஸ்டார் உலக நாயகனை விட சூப்பர் ஸ்டார் மூன்று மடங்கு அதிகம் சம்பளம் வாங்கி ஆச்சரியப்படுத்தி உள்ளார். 

இதில் கருப்பு கண்ணனாக ரசிகைகளின் மனதைக் கவர்ந்த முரளி ஒரு படத்திற்கு மட்டும் 4 லட்சம் சம்பளம் வாங்கியிருக்கிறார். இவரைப் போலவே அந்தக் காலத்தில் ஆணழகன்களாக பார்க்கப்படும் ராம்கி மற்றும் ரகுமான் இருவரும் முரளியை போன்று 4 லட்சம் சம்பளம் வாங்கி உள்ளனர். இவர்களை தொடர்ந்து கிராமத்து கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி நடிக்கும் ராமராஜன் ஒரு படத்திற்கு மட்டும் 3 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.

கார்த்திக்: நடிகர் முத்துராமன் அவர்களின் மகனாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த நவரச நாயகன் கார்த்திக், 1981 ஆம் ஆண்டு வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் கதாநாயகனாக நடித்த காலகட்டத்தில் ஒரு படத்திற்காக 10 லட்சம் சம்பளம் வாங்கினார்.  

பிரபு: செவாலியர் சிவாஜி கணேசனின் மகனான பிரபு தமிழில் மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் கதாநாயகனாக நடித்த போது ஒரு படத்திற்காக சுமார் 15 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். இவர் தற்போது டாப் நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Also Read: இந்தியளவில் அதிக அவார்டுகளை குவித்த ஜாம்பவான்.. கமல் போல் அவார்டுகள் வேண்டாம் என அறிவித்த ஹீரோ

சத்யராஜ்: இவர் முதலில் வில்லனாகவே நடித்து அதன் பிறகு தான் கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவருடைய கோயம்புத்தூர் குசும்பு கலந்த  நக்கல் பேச்சுக்காகவே இவருடைய படங்கள் ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள். இவர் ஒரு படத்திற்காக 20 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.

விஜயகாந்த்: சினிமாவிலும் அரசியலிலும் ஆதிக்கம் செலுத்திய விஜயகாந்த் 80, 90களில் புரட்சிகரமான படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். இவர் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்திற்காக மட்டும் 20 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்..

கமல்: நான்கு வயதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசன் 80, 90களில் ஒரு படத்திற்கு ரூபாய் 20 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.

Also Read: காதலுக்கு அடையாளமாய் முரளி நடித்த 6 படங்கள்.. காதல்னா இதயம்னு காட்டிய ஹீரோ

ரஜினி: 70களில் வில்லனாக நடித்து அதன் பிறகு கதாநாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்போது வரை  டாப் ஹீரோவாக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கிறார். இவர் 80, 90களில் ஒரு படத்திற்காக மட்டும் 60 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் இப்போது இவருடைய சம்பளம் கோடிகளைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு இந்த 10 பிரபலங்கள்தான் 90களில் உச்சத்தில் இருந்த நடிகர்கள். இவர்கள் லட்சக்கணக்கில் வாங்கிய சம்பள விபரம் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதே சமயம் ரஜினிகாந்த் உலக நாயகனை விட 3 மடங்கு அதிகம் சம்பளம் வாங்கியதை வைத்து சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் தற்போது கெத்து காட்டுகின்றனர்.

Also Read: விஜயகாந்த் பட ரீமேக்கில் நடித்த ரஜினி, கமல்.. மாஸ் காட்டிய வசூல்

- Advertisement -

Trending News