உறுதி செய்யப்பட்ட தலைவர் 171.. சம்பளம் எல்லாம் முக்கியமில்ல, இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினி

இளம் நடிகர்கள் கூட இப்படி ஒரு எனர்ஜியுடன் இருந்தது கிடையாது. அந்த அளவுக்கு சூப்பர் ஸ்டார் இந்த வயதிலும் பம்பரமாக சுழன்று நடித்து வருகிறார். தற்போது ஜெயிலர் படத்தில் பிஸியாக இருக்கும் அவர் அடுத்ததாக லைக்காவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

ஜெய் பீம் ஞானவேல் இயக்கும் அந்த திரைப்படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் அடுத்ததாக தலைவர் 171 திரைப்படமும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தை யார் தயாரிக்க போகிறார்கள் என்பதில் பலத்த போட்டியே நிலவியது.

Also read: ரஜினியின் கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்ற ஒரே இயக்குனர்.. 24 படங்களில் ‘நச்’ என ஹிட் கொடுத்த 6 படங்கள்

அதிலும் கமலின் ராஜ்கமல் நிறுவனம் கூட இந்த போட்டியில் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்போது தலைவர் 171 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்து ஏற்கனவே பல செய்திகள் வெளி வந்திருந்தது.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் ரஜினிக்கு 115 கோடி சம்பளமும், லோகேஷுக்கு 40 கோடி சம்பளமும் கொடுப்பதற்கு சம்மதித்துள்ளது. சில நடிகர்கள் இயக்குனருக்கு இவ்வளவு கோடி சம்பளம் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் சூப்பர் ஸ்டார் அனைத்திலுமே வித்தியாசமானவர் தான். அதனாலேயே இந்த சம்பள விஷயத்தை எல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

Also read: லியோவை ஓரம் கட்ட வரும் ஏகே 62.. அஜித் கொடுக்க போகும் பிறந்தநாள் சர்ப்ரைஸ்

ஏனென்றால் இப்போது அவர் மனதில் இருப்பதெல்லாம் ஒரே ஒரு விஷயம் தான். அதாவது மிகப்பெரிய ஒரு ஹிட் படத்தை கொடுத்து பாக்ஸ் ஆபிஸை திணறடிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதனாலேயே அவர் இப்போது லோகேஷிடம் ஒரு விஷயத்தை தெளிவாக கூறியிருக்கிறார். அதாவது பாட்ஷா திரைப்படம் போன்ற ஒரு கதை வேண்டும் என்றும் அதுபோன்ற ஒரு தரமான வெற்றியை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

எப்போதுமே சவாலான விஷயங்களை விரும்பி ஏற்றுக் கொள்ளும் லோகேஷ் இதற்கு சந்தோசமாக சம்மதித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் லியோ திரைப்படத்தை முடித்துவிட்டு இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளிலும் அவர் இறங்க இருக்கிறார். தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திருப்பி இருக்கும் இவர் ரஜினி எதிர்பார்க்கும் அந்த வெற்றியை தேடி தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also read: முக்கிய கட்சியில் இணைந்த ரஜினி வில்லனின் மனைவி.. சூடு பிடிக்கும் தேர்தல் களம்

- Advertisement -