வெளிவந்தது அனிமல் பட சம்பள விபரம்.. விஜய்யை கொஞ்சி கிடைக்காத பலனை அடைந்த ராஷ்மிகா

Animal Movie 5 Celebrities Salary: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சந்தீப் ரெட்டி வாங்க இயக்கத்தில் அனிமல் படம் வெளிவந்தது. இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் டிரிப்டி டிம்ரி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பாலிவுட் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களிடமும் பேசும் பொருளாக அமைந்துவிட்டது. அதற்கு காரணம் இப்படத்தில் காட்சிகள் கொஞ்சம் கன் கூசும் அளவிற்கு இருந்ததால் மோசமான விமர்சனங்கள் கிடைத்தது.

ஆனாலும் வசூல் அளவில் எந்தவித குறைச்சலும் இல்லை என்பதற்கு ஏற்ப 100 கோடி போட்டு எடுத்த இப்படத்திற்கு கிட்டத்தட்ட 917 கோடி லாபம் கிடைத்திருக்கிறது. ஆனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சில பிரபலங்களும் இப்படத்தை பார்த்துவிட்டு மோசமான கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இப்படி ஒரு மிருகத்தனமான படத்தை யார் பார்ப்பார்கள் என்று திரையில் இடுகிறார்கள் என்றே புரியவில்லை என்று சிலர் கடுப்பும் அடைந்தார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் எங்களுடைய நோக்கம் எதுவோ அதை நாங்கள் அடைந்து விட்டோம் என்று மொத்த படக்குழுவும் சந்தோஷத்தில் பூரித்து போய் இருக்கிறார்கள்.

Also read: கண்ணு கூசுதே, அனிமல் ராஷ்மிகாவுக்கு டஃப் கொடுக்கும் அனுபமா.. ஐட்டம் ரேஞ்சுக்கு அடிக்கும் லிப்லாக்

இந்நிலையில் இப்படத்தில் நடித்த டாப் 5 பிரபலங்களின் சம்பளம் விபரங்கள் வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் ரன்பீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு சம்பளமாக 70 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனில் கபூருக்கு 2 கோடி, பாபி தியோல்- க்கு 4 கோடி மற்றும் டிரிப்டி டிம்ரி 70 லட்சமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அடுத்ததாக ராஷ்மிகா, இவர் எத்தனையோ படங்களில் இதற்கு முன்னதாக நடித்திருந்தாலும் இந்த ஒத்த படங்களில் மூலம் மொத்த கோடியையும் பெற்றுவிட்டார் என்பதற்கு ஏற்ப இப்படத்தில் 4 கோடி சம்பளத்தை பெற்று இருக்கிறார். அத்துடன் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் இனி வரும் படங்களில் அவருடைய சம்பளத்தை இரட்டிப்பாக வேண்டும் என்று டிமாண்ட் பண்ணி வருகிறார்.

Also read: பெயரை கெடுத்து கந்தலாக்கிய ராஷ்மிகா மந்தனா.. பத்து முறை கடித்து குதறிய நடிகரால் நிஜ வாழ்க்கையில் சர்ச்சை

Sharing Is Caring:

அதிகம் படித்தவை