3 வருட ரிலேஷன்ஷிப், ஓபனாக பேசிய சாக்ஸி.. கவினுக்கு முன்னாடி இன்னொருத்தரா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இதற்கு முன்னதாக சாக்ஸி காலா, விசுவாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சாக்ஸி முன்னணி ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பல படங்களை கையில் வைத்துள்ள சாக்ஸி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். சாக்ஷி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 இல் கலந்து கொண்ட போதே கவினுயுடன் காதல் வயப்பட்டார். அப்போது அதுவே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தன்னுடைய கல்லூரி காதல் நினைவுகளை பற்றி சாக்ஷி கூறியுள்ளார். அதாவது, அவர் கல்லூரி படிக்கும்போது மூன்று வருடம் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்ல் இருந்துள்ளார். அதுவும் காலேஜ் கேண்டீனில் ஒருவர்க்கொருவர் பார்த்துக் கொள்வதுடன் சரிதான். மேலும் கண்ணாலே இருவரும் பேசிக் கொள்வார்களாம்.

மேலும், அவர் ஆறு மணிக்கு போன் செய்கிறேன் என்று சொன்னால் அந்த போன் காலுக்காக சாக்ஸி 8 மணி வரைக்கும் காத்து இருப்பாராம். அப்போது மாதம் ஒருமுறை தான் கல்லூரியில் இருந்து வெளிவர முடியும். அப்போது தான் காபி ஷாப்பில் அவருடன் நேருக்கு நேராக பேசும் வாய்ப்பு கிடைக்கும்.

அந்த நாட்கள் மிகவும் அழகானது என சாக்ஸி கூறியுள்ளார். மேலும் இது என் குடும்பத்திற்கும் தெரியும். என் குடும்பம் என்னை நம்புகிறது, எந்த அளவுக்கு ஒருவருடன் பழகுவேன் என்பது அவர்களுக்கும் தெரியும் என சாக்ஸி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது சாக்ஸி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இவர் அதில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறார். மேலும் பகீரா, புறவி, தி நைட், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை போன்ற படங்களில் சாக்ஸி நடித்து வருகிறார்.