மகேஷ் பாபுவுக்கு ஓகே ஆனா அஜித் கதைக்கு நோ.. ரொம்பவும் கறார் காட்டும் சாய் பல்லவி 

மலர் டீச்சராக ரசிகர்களுக்கு அறிமுகமான சாய் பல்லவி தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சமீப காலமாக தெலுங்கு திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வரிசையில் இவர் தெலுங்கில் பிரபல நடிகர்களாக இருக்கும் நானி, நாக சைதன்யா உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் தயாரிப்பாளர்கள் பலரும் இவரை தங்கள் படங்களில் புக் செய்ய ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

ஆனால் சாய் பல்லவி தன்னிடம் வரும் எல்லா கதைகளையும் ஒப்புக்கொண்டு நடிப்பதில்லை. இருக்கு பிடித்திருந்தால் மட்டுமே சம்மதம் தெரிவிக்கிறார். சமீபத்தில்கூட அஜித் நடித்து மாபெரும் ஹிட்டான வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார்.

அதில் அவருக்கு தங்கையாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவரோ என்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கறாராக சொல்லிவிட்டாராம். தங்கை கேரக்டர் என்பதால் தான் அவர் நடிக்கவில்லை என்று பலரும் பேசி வந்தனர்.

இந்நிலையில் அவர் நடிகர் மகேஷ் பாபுவுக்கு தங்கையாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அப்புறம் ஏன் அவர் சிரஞ்சீவி படத்தில் நடிக்கவில்லை என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. இதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது தங்கை கேரக்டரில் நடிப்பதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லையாம். ஆனால் அவர் நடிக்கும் படத்தில் அவருக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்க வேண்டும். கேரக்டர் ரொம்ப பவர்ஃபுல்லாக இருக்க வேண்டுமாம். கதை மொக்கையாக இருந்தால் அவர் நடிக்க மாட்டாராம். அதனால் தான் அவர் குறிப்பிட்ட படங்களை மட்டுமே செய்ய தேர்வு செய்து நடித்து வருகிறார்.