ஜோதிகா இடத்தை பிடித்த சாய்பல்லவி.. காப்பாற்ற போராடும் கார்கி ட்ரெய்லர் எப்படி இருக்கு?

சமீபகாலமாக நடிகை சாய் பல்லவி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் இப்போது கார்கி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கௌதம் ராமச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து தங்களுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை வெளியிட இருக்கின்றனர். இதனால் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது. முதலில் இந்த கதாபாத்திரத்தில் ஜோதிகா தான் நடிப்பதாக இருந்தது.

ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு சாய் பல்லவிக்கு சென்றது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் பலரையும் கவர்ந்துள்ளது. அதில் எதார்த்தமாக நடித்திருக்கும் சாய் பல்லவியின் நடிப்பு பாராட்டும் வகையில் இருக்கிறது.

அந்த ட்ரைலரில் சாய் பல்லவி காவல் துறையால் கைது செய்யப்படும் தன் தந்தையை காப்பாற்றுவதற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார் என்பது மிகவும் தத்ருபமாக தெரிகிறது. அதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளை அவர் எப்படி கையாளுகிறார் என்பது தான் படத்தின் கதை.

ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியிலும் சாய்பல்லவியின் நடிப்பு பிரம்மிக்க வைக்கிறது. தந்தையை காப்பாற்றுவதற்காக அவர் போராடும் இடங்களிலும், அவரை பார்க்க முடியாமல் கதறி அழும் இடங்களிலும் அவர் ஸ்கோர் செய்கிறார். இப்படத்தில் அவர் பள்ளி ஆசிரியராக நடித்திருக்கிறார்.

அந்த வகையில் மலர் டீச்சராக பலரையும் கவர்ந்த சாய் பல்லவி இந்த திரைப்படத்திலும் அனைவரையும் கவர தயாராகி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஜோதிகா நடிக்க வேண்டிய கதையில் இவர் நடித்துள்ளதால் இவருடைய நடிப்பு எப்படி இருக்கும் என்று சில எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அதையெல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் ஜோதிகா கதையின் நாயகியாக எப்படி இருப்பாரோ அதற்கும் மேலாக இவர் ஒவ்வொரு காட்சியிலும் தன்னை நிரூபித்து இருக்கிறார். இதனால் இந்த படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Next Story

- Advertisement -