வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

விஜய் முன்னிலையில் 2வது திருமணம்.. உண்மை காரணத்தை போட்டு உடைத்த எஸ்ஏசி

ஒரு காலகட்டத்தில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். கேப்டன் விஜயகாந்தின் பெரும்பான்மையான படங்களை எஸ்ஏசி இயக்கியுள்ளார். இந்நிலையில் அவருடைய வாரிசான விஜய்யை கதாநாயகனாக நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பின்பு தளபதி விஜய் தன்னுடைய கடின உழைப்பால் எட்ட முடியாத உயரத்தை அடைந்து உள்ளார். இந்நிலையில் சிலகாலமாக விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏசி இடையே பிரச்சனை நடந்து வருகிறது. இதனால் தனது பெற்றோருடன் விஜய் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் யார் இந்த SAC என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.இதில் தன்னுடைய ஆரம்ப காலத்தில் உள்ள நிகழ்வுகளை பகிர்ந்து வருகிறார். அப்போது தான் ஏன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன் என்பதை பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

அதாவது எஸ்ஏசி கிறிஸ்டின் மதத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவி ஷோபா இந்து. முதலில் எம்ஜிஆரின் மனைவி கமலா அம்மாள் தாலி எடுத்து கொடுக்க எங்களது திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு சந்தோஷமாக நகர்ந்த எங்கள் வாழ்க்கையில் சில காலம் கழித்து ஷோபா என்னிடம் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொள்வோமா என்று கேட்டார்.

அப்போது ஒரு கடலில் இரு படகில் தனித்தனியாக செல்லும்போது அலை அதிகமாக வந்தால் ரெண்டு பேரும் ஒரே இடத்தில் கரைசேர முடியாது என்று ஷோபா கூறியுள்ளார். இதனால் நாங்கள் இருவரும் ஒரு மதக் கோட்பாடு செல்லவில்லை என்பதை உணர்ந்து கிறிஸ்டின் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டோம்.

அப்போது விஜய்க்கு ஆறு வயது. அவரின் முன்னிலையில் தான் எங்களுக்கு இரண்டாவது திருமணம் நடந்தது என அந்த யூடியூப் சேனலில் எஸ்ஏசி பேசியிருந்தார். மேலும் அந்த சேனலில் விஜய் பற்றி பல சுவாரசியமான விஷயங்களை தொடர்ந்து எஸ்ஏசி பேசி வருகிறார்.

- Advertisement -

Trending News