இவ்வளவு காசு இருந்தும் சின்னத்திரையில் நடிக்க இதுதான் காரணமா.? சீரியல் வசனங்களால் தளபதியை அசிங்கப்படுத்தும் எஸ்ஏசி

Director SA Santhirasekar: தமிழ் சினிமாவில் 90களில் சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தும் இயக்கியும் கொண்டிருந்த எஸ்ஏ சந்திரசேகர் இப்போது சீரியலில் நடிக்க துவங்கி இருக்கிறார். இந்த விசயம் முதலில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக மிரட்டிக் கொண்டிருக்கும் விஜய்யின் அப்பாவாக இருக்கும் எஸ்ஏசி இடம் இருக்காத பணம்,காசு சீரியலில் நடிப்பதன் மூலம் கிடைத்து விடுமா என பலருக்கும் புரியாத புதிராக இருந்தது.

ஆனால் இப்போதுதான் அதெல்லாம் விளங்குகிறது. விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற சீரியலில் சுவாமியப்பன் என்ற கேரக்டரில் மிக கச்சிதமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் வில்லனாக இருக்கும் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவை எஸ்ஏசி கோயிலில் வைத்து வெளுத்து வாங்குகிறார். காரணம் தத்தெடுத்து வளர்க்கும் ரேணுகாவை ஆனந்த் பாபுவின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என எஸ்ஏ சி முடிவெடுக்கிறார்.

Also Read: பீஸ்ட் வெற்றியா, தோல்வியா.? நெல்சனிடம் விஜய் கூறிய விளக்கம்.. மறுபடியும் இந்த கூட்டணி தொடருமா.?

ஆனால் பணக்காரராக இருக்கும் ஆனந்த் பாபு ரேணுவை ஏலனமாக நினைத்து அவரை தன்னுடைய வீட்டு மருமகளாக்க முடியாது என கேவலமாக பேசுகிறார். உடனே எஸ் எஸ் சி தளபதி விஜய் மனதில் வைத்துக்கொண்டு சீரியல் வசனங்களால் வெளுத்து வாங்கி இருக்கிறார். விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முதலில் எஸ்ஏசி விரும்பினார்.

அந்த சமயத்தில் தான் எஸ்ஏசி மற்றும் விஜய் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு தற்போது வரை பிரிந்து இருக்கின்றனர். இருப்பினும் எஸ் எஸ் சி ஒரு தந்தையாக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தன்னுடைய மகனின் வளர்ச்சிக்கு தோள் கொடுத்து தூக்கி நிறுத்தியவர்.

Also Read: நடனத்தில் கொடி கட்டி பறந்த அக்கடதேச நடிகர்.. விஜய்யால் முடியாததை 80ஸ்களிலே செய்து காட்டிய ஹீரோ

ஆனால் அந்த நன்றியை எல்லாம் மறந்து விட்டு தன்னுடைய அரசியல் பயணத்தை குறித்த எந்த முடிவையும் எடுக்கக் கூடாது என அசிங்கப்படுத்திவிட்டார். இதனால் இன்றுவரை எஸ்ஏசி மற்றும் விஜய் இருவருக்கும் தள்ளித்தான் இருக்கின்றனர். இருப்பினும் தன்னுடைய மகனுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக கிழக்கு வாசல் சீரியலில் வரும் வசனங்களின் மூலம் கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.

‘ஒருவன் ஓவராக தண்ணி அடித்து விட்டால் போதையில் மயக்கம் வரும், தலை சுற்றும், என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் பேசுவார்கள். அதே மாதிரி தான் இப்பொழுது வசதியான வாழ்க்கை வந்ததும் பணக்காரனாக ஆகிவிட்டாய் என்று கண்ணு தெரியாமல் அலைகிறாய்! மனுஷனாக இருந்தால் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும். எப்படி இந்த நிலைமைக்கு வந்தோம், எப்படி வளர்ந்தோம், யாரால் வந்தோம் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று விஜய்யை தாக்கி பேசியிருக்கிறார். இந்த வசனம் தற்போது சோசியல் மீடியாவில் அஜித் ரசிகர்களால் வைரலாக பரப்பப்படுகிறது.

Also Read: விஜய்யை மறைமுகமாக டேமேஜ் செய்யும் நெல்சன்.. சகுனியாக அடுத்தடுத்த படங்களுக்கு போட்ட பிள்ளையார் சுழி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்