எஸ்ஜே சூர்யா உடன் கிசுகிசுக்கப்பட்ட 4 நடிகைகள்.. 54 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருப்பதால் வந்த வினை

எஸ்ஜே சூர்யா சினிமாவில் இயக்குனராக வாழ்க்கையை ஆரம்பித்து பின்பு நடிகராக மாறி நடித்து வருகிறார். அப்படி இவர் நடித்த படங்களில் பல சர்ச்சையில் சிக்கி 4 நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கப்பட்டார். அப்படி இவரிடம் சிக்கிய 4 நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

நிலா: 2005 ஆம் ஆண்டு எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான ஒரு காதல் திரைப்படம் அன்பே ஆருயிரே. இதில் எஸ்ஜே சூர்யா, நிலா, ஊர்வசி மற்றும் சந்தானம் ஆகியோர் நடித்தனர். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடித்த நடிகையுடன் ஏகப்பட்ட கிசுகிசுகளுடன் இவரது பெயர் மிகவும் பாதிப்படைந்தது.

Also read: இறுதிகட்ட படப்பிடிப்பில் மார்க் ஆண்டனி.. வித்தியாசமான லுக்கில் விஷால், எஸ்ஜே சூர்யா

ரெஜினா கசாண்ட்ரா: செல்வராகவன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான ஒரு திகில் திரைப்படமாக நெஞ்சம் மறப்பதில்லை வெளிவந்தது. இதில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா நடித்தனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் எஸ்ஜே சூர்யாக்கும் மற்றும் ரெஜினா கசாண்ட்ராக்கும் காதல் வலையில் சிக்கியுள்ளதாக பெரிய கிசுகிசு ஏற்பட்டது.

பிரியா பவானி சங்கர்: நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஒரு நகைச்சுவை திரைப்படமாக மான்ஸ்டர் வெளிவந்தது. இதில் எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் மற்றும் கருணாகரன் நடித்திருந்தார்கள். இப்படம் வெளிவந்த சமயத்தில் எஸ் ஜே சூர்யா நிஜமாகவே இவரை காதலிப்பதாக பல கிசுகிசுக்கள் வெளிவந்தது.

Also read: எத்தனை நாள் தான் நானும் சிங்கிளாக இருக்க.. எஸ்ஜே சூர்யா வலையில் சிக்கிய 23 வயது நடிகை

சிம்ரன்: 2004 ஆம் ஆண்டு எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் நியூ என்ற திரைப்படம் வெளிவந்தது. இதில் எஸ்ஜே சூர்யா, சிம்ரன், கிரண் மற்றும் தேவயானி ஆகியோர் நடித்தார்கள். இதில் இரண்டு கதாபாத்திரத்தில் பப்பு மற்றும் விச்சுவாக நடித்திருப்பார். பப்பு பகலில் எட்டு வயது சிறுவனாகவும் மற்றும் இரவில் 28 வயது விச்வாகவும் நடித்து சிம்ரனை திருமணம் செய்து கொள்வார். இந்த படத்திற்குப் பிறகு சில சர்ச்சைகளில் இவர் சிக்கினார்.

தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்த படங்களில் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு பெரிய மன்மதன் லீலைகளாக உலா வந்தார். ஆனாலும் நிஜ வாழ்க்கையில் இவருக்கு 54 வயதாகியும் திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாக இருப்பது தான் இவருடன் நிலைமையாக இருக்கிறது.

Also read: உங்க பசிக்கு நான் இறையாக முடியாது.. விஷாலை கெஞ்சி கதற வைத்த எஸ்ஜே சூர்யா

Sharing Is Caring:

அதிகம் படித்தவை